ARTICLE AD BOX
நேற்று ஒரே நாளில் மொத்தமாக நான்கு படங்களுக்கு பூஜைப் போடப்பட்டிருக்கிறது. அதில் ஓரிரு படங்களின் படப்பிடிப்பையும் நேற்றே தொடங்கிவிட்டனர்.
Lady with the braid is back…
First day. Lights on. Shadows waiting.#DemonteColony3 #DayOne #TheEndIsTooFar Let’s have some fun @AjayGnanamuthu @arulnithitamil @SamCSmusic #meenakshigovindharajan #iam_archanaravichandran pic.twitter.com/M2i6kk5Txy
'கே.ஜே.ஆர்' ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் கே.ஜே. ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம், 'டிமான்டி காலனி 3', 'இவன் தந்திரன் 2', பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் என நான்கு படங்களுக்கு நேற்று பூஜைப் போடப்பட்டிருக்கிறது. அப்படங்களின் விவரங்களைப் பார்ப்போமா...
கே.ஜே. ராஜேஷ் நடிக்கும் திரைப்படம்:
தயாரிப்பாளர் கே.ஜே. ஆர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரீகன், அறிமுக இயக்குநராக இப்படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் கே.ஜே. ஆருடன் மலையாள நடிகர் அர்ஜூன் அசோகன், அஜூ வர்கீஸ், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'கோர்ட்' படத்தின் நாயகி ஶ்ரீதேவி எனப் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் கே.ஜே. ஆர் ஹீரோவாக அறிமுகமாகும் 'அங்கீகாரம்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
KJR's Second Movieஇவன் தந்திரன் 2:
இயக்குநர் ரா. கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ஷ்ரதா ஶ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இவன் தந்திரன்'.
இப்படத்தின் இரண்டாம் பாகம் 'வடசென்னை' சரண் நடிப்பில் வெளியாகும் என முன்பே அறிவித்திருந்தனர். இப்படத்தின் பூஜையும் நேற்று நடைபெற்றிருக்கிறது.
டிமாண்டி காலனி 3:
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு 'டிமாண்டி காலனி' படத்தின் முதல் பாகம் வெளியாகியிருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் கடந்தாண்டு வெளியானது.
இப்படம் வெளியாகி ஓராண்டிற்குள்ளாகவே படத்தின் மூன்றாம் பாகத்தையும் தொடங்கிவிட்டார்கள். படத்திற்கும் நேற்று பூஜைப் போட்டிருக்கிறார். 'டிமாண்டி காலனி 3' தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர், " Lady with the braid is back. First day. Lights on. Shadows waiting." எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
Vijay Sethupathi - Puri Jaganadh Filmபூரி ஜெகன்நாத் - விஜய் சேதுபதி படம்:
இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு முன்பே வெளியாகியிருக்கிறது. படத்தில் தபு, சம்யுக்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
இயக்குநர் பூரி ஜெகன்நாத்தும், நடிகை சார்மி கெளரும் இணைந்து படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை நேற்று பூஜையுடன் ஹதராபாத்தில் தொடங்கியிருக்கிறார்கள்.

5 months ago
7





English (US) ·