ARTICLE AD BOX
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற டெல்லி Vs ராஜஸ்தான் போட்டி டிராவில் முடிய, சூப்பர் ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரங்களுடனும் நல்ல நிலையில் இருந்தது. கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 9 ரன்கள் மேட்டுமே தேவைப்பட ஹெட்மயரும், துருவ் ஜோரலும் களத்தில் இருந்தனர்.
ஸ்டார்க்இருப்பினும், கடைசி ஓவரில் ஸ்டார்க் யார்க்கர்களாக வீசி 7 ரன்களை மட்டும் கொடுத்து போட்டியை டிரா செய்தார். அடுத்து சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு, ஹெட்மயரும், ரியான் பராக்கும் இறங்கினர். அப்போதே, இப்போட்டியில் 28 பந்துகளில் 51 ரன்கள் அடித்த நிதிஷ் ராணாவை ஏன் இறக்கவில்லை எனக் கேள்வியெழுந்தது. இறுதியில், ஸ்டார்க் வீசிய சூப்பர் ஓவரில் ஒரேயொரு பவுண்டரியுடன் ஒரு விக்கெட்டை இழந்து 11 ரன்கள் குவித்ததது ராஜஸ்தான். அதைத் தொடர்ந்து, டெல்லி அணியில் இறங்கிய கே.எல்.ராகுலும், ஸ்டப்ஸும், சந்தீப் சர்மா வீசிய முதல் 4 பந்துகளிலேயே 13 ரன்கள் அடித்து ஆட்டத்தை முடித்தனர்.
Dhoni's Masterclass Finish & At last CSK wins - Analysis with Commentator Muthu | LSG vs CSK | IPLகை மேல் இருந்த இருந்த வெற்றியை ராஜஸ்தான் டிராவுக்கு கொண்டு, தோற்றதற்கு, நிதிஷ் ராணாவை சூப்பர் ஓவரில் இறக்காதது முக்கிய காரணம் என்று பலரும் கூறிவருகின்றனர். இந்த நிலையில், சூப்பர் ஓவரில் களமிறக்கப்படாதது குறித்து நிதிஷ் ராணா பேசியிருக்கிறார்.
நிதிஷ் ராணாபோட்டிக்குப் பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தக் கேள்விக்குப் பதிலளித்த நிதிஷ் ராணா, "இது ஒருவர் எடுத்த முடிவல்ல, அணி நிர்வாகம் எடுத்த முடிவு. ஒருவேளை, ஹெட்மயர் 2 சிக்ஸர்கள் அடித்திருந்தால் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டீர்கள். அதுதான் என்னுடைய பதில். ஹெட்மயர் எங்கள் ஃபினிஷர், இது எல்லோருக்கும் தெரியும். இதற்கு முன்பு அதை நிரூபித்திருக்கிறார். இது போன்ற முடிவுகளை ஒருவர் எடுப்பதில்லை. இதில் விவாதிக்க அணி நிர்வாகம் இருக்கிறது. ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக இருந்திருந்தால், உங்களின் கேள்வி வேறுவிதமாக இருந்திருக்கும். கிரிக்கெட் என்பது ஒரு முடிவு சார்ந்த விளையாட்டு" என்று கூறினார்.
ஸ்டார்க் தீயாய் இறக்கிய யார்க்கர்களும் டெல்லியின் வெற்றியும்..! - Commentator Muthu Interview
8 months ago
8







English (US) ·