Padayappa: " 'படையப்பா' படம் பார்த்துட்டு ஜெயலலிதா சொன்ன விஷயம்..." - பகிர்கிறார் ரமேஷ் கண்ணா

2 weeks ago 2
ARTICLE AD BOX

ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் 'படையப்பா' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ-ரிலீஸிலும் இப்படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படத்தின் நினைவுகளை காணொளி வாயிலாக ரஜினி பகிர்ந்தபோது, "நீலாம்பரி கதாபாத்திரத்தை நான் ஜெயலலிதாவை வைத்து வடிவமைத்ததாக அப்போது பேசப்பட்டது.

PadaiyappaPadaiyappa

ஆனால், 'பொன்னியின் செல்வன்' நந்தினி கதாபாத்திரத்தை வைத்து நீலாம்பரி கேரக்டரை டிசைன் செய்தேன்." எனக் கூறியிருந்தார்.

'படையப்பா' ரீ-ரிலீஸ் ஆவதையொட்டி படத்தில் நடித்திருக்கும் நடிகர் ரமேஷ் கண்ணாவைப் பேட்டிக் கண்டோம். ஜெயலலிதா இப்படத்தைப் பார்த்தது குறித்து அவர் நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

நடிகர் ரமேஷ் கண்ணா பேசுகையில், "ஜெயலலிதாவுக்கும் ரஜினி சாருக்கும் அப்போ சில மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ஸ் இருந்தது.

ரோட்ல ரஜினி சார் போகும்போது பிரச்னை செய்துவிட்டாங்கனு தவறான புரிதல் இருந்தது. அதனால, ரஜினி சார் பேசும்போதெல்லாம் அவங்களைத்தான் சொல்றாங்கனு பதிய ஆரம்பிச்சுடுச்சு.

அவர் எதைப் பேசினாலும் ஜெயலலிதாவைத் தாக்கிப் பேசுவதாக நினைச்சுட்டாங்க.

Ramesh Khanna - PadaiyappaRamesh Khanna - Padaiyappa

'முத்து' படத்துல வர்ற ஒரு வசனத்தையும் ஆடியன்ஸ் ஜெயலலிதாவைச் சொல்வதாக கனெக்ட் பண்ணிட்டாங்க. நாங்க அப்போ ரஜினி சார் அரசியலுக்கு வருவார்னு மைண்ட்ல வச்சு எழுதினோம்.

ஆனால், 'படையப்பா' திரைப்படம் ரிலீஸானப் பிறகு ஜெயலலிதா படத்தைப் பார்த்தாங்க. ரஜினி சார்தான் படத்தின் ப்ரிண்ட் அனுப்பினாங்க. அதைப் பார்த்துட்டு அவங்க 'நல்லா பண்ணியிருக்காங்க'னு பாராட்டத்தான் செய்தாங்க." எனக் கூறினார்.

Read Entire Article