Paradhu Po: 'All Appas Are Liars' - வெளியான இயக்குநர் ராமின் 'பறந்து போ' படத்தின் டீசர்

6 months ago 8
ARTICLE AD BOX

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கிற 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் பாடலான 'சன்ஃப்ளவர் பாடல்' கடந்த மே 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இப்பாடல் வெளியான சமயத்தில் இந்தப் பாடல் குறித்து இயக்குநர் ராம், "எல்லோரையும் போல் எனக்கும் சூரியகாந்தியை மிகவும் பிடிக்கும்.

ஒரு நல்ல சூரியோதயத்தில் சூரியகாந்தித் தோட்டத்தில் படம்பிடிக்கிற ஒரு அரிய வாய்ப்பு என்னுடைய முதல் படத்தில் எனக்குக் கிடைத்தது.

Paradhu Po Teaser Paradhu Po Teaser

`கற்றது தமிழ்' படத்தின் `இன்னும் ஓர் இரவு' பாடலை ஆந்திர மாநிலத்து கடப்பாவின் சூரியகாந்தித் தோட்டத்தில் படம்பிடித்தோம். `தங்கமீன்கள்' படத்தின் `ஆனந்த யாழை' பாடலை சூரியகாந்தித் தோட்டத்தில் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்.

ஆனால், சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால் கேரளாவில் உள்ள அச்சன்கோவிலின் பனிபெய்யும் மலைகள் மீது அப்பாடலுக்காக ஏறினோம்.

`பேரன்பு' திரைப்படத்திற்கும் சூரியகாந்தித் தோட்டத்திற்கு நடுவில் ஒரு வீடு வேண்டும் என்று தேடினோம். அப்போதும் சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்கவில்லை.

எனவே, அந்த வீட்டை கொடைக்கானல் மன்னவனூர் ஏரிக்கரைக்கு மாற்றினோம். அதற்குப் பின் பறந்து போவில் தான் சூரியகாந்தி கதைக்குள் வந்தது. சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்கவில்லை என்றாலும், கர்நாடகத்தில் உள்ள மைசூரில் ஒரு சிறு தோட்டமும், அன்னூரில் ஒரு ஒற்றை சூரியகாந்தி மலரும் கிடைக்கப்பெற்றோம்.

சூரியகாந்தியைப் படம்பிடிக்கும் வேட்கை ஒவ்வொரு படத்திலும் கூடிக்கொண்டே இருக்கிறது." என்ற விஷயத்தைப் பகிர்ந்திருந்தார். ராம் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார்.

Paradhu Po Teaser Paradhu Po Teaser

படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் ராமின் தன்னுடைய 'செவன் ஹில்ஸ் செவன் சீஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரித்திருக்கிறார்.

படத்தின் டீசர் இன்றைய தினம் வெளியாகியிருக்கிறது. குறும்பு செய்யும் சிறுவன், அவனுடைய தந்தை என இந்த 'பறந்து போ' உலகம் பயணிக்கவிருக்கிறது. அதன் டீசர் இதோ!

Read Entire Article