ARTICLE AD BOX
ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஞ்சலி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'பறந்து போ'.
இந்தப் படம் வருகிற ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜூன் 12) நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய மாரி செல்வராஜ், "ராம் சார் எப்போதும் சீரியஸ் ஆகப் பேசுவதுபோலத்தான் வெளியே தெரியும்.
பறந்து போஆனால் அவர் ஜாலியாகப் பேசுகின்ற விஷயங்கள் வெளியில் வருவது இல்லை. அதிகமாக இருவரும் சேர்ந்து காமெடி படங்களைத்தான் பார்ப்போம்.
'மைக்கேல் மதன காம ராஜன்', 'பஞ்ச தந்திரம்' ஆகிய படங்களை 100 தடவைக்கு மேல் பார்த்திருப்போம். 'களவாணி' படம் வந்தபோது இந்த மாதிரி படம் எடு என்று என்னைச் சொன்னார்.
Vikram Sugumaran: "அண்ணன் பாலுமகேந்திரா சாரிடம் வேலை பார்க்கும்போது..." - கலங்கிய மாரி செல்வராஜ்காமெடி சார்ந்து நிறைய விஷயங்களை இருவரும் பேசிக்கொள்வோம். எங்களை சீரியஸாக மாற்றியது ஈழப் பிரச்னைதான்.
2009-ல் நடந்த ஈழப்பிரச்னைக்குப் பிறகுதான் அவர் அரசியலைப் பேச ஆரம்பித்தார். இருவரும் சேர்ந்து நிறைய அரசியலைப் பேசுவோம். அதுதான் எனது சினிமா பயணத்தை மாற்றி அமைத்தது.
மாரி செல்வராஜ் அதன்பிறகுதான் அரசியல் சார்ந்த கதைகளை எடுக்க நினைத்தேன். இல்லையென்றால் 'களவாணி' மாதிரியான ஒரு படத்தைத்தான் எடுத்திருப்பேன். அவர் சிரிக்கும்படியான கதைகளை எடுத்திருப்பேன்" என்று கூறியிருக்கிறார்.
DNA: "பரியேறும் பெருமாள் கதையை முதல்ல அதர்வாகிட்ட சொன்னேன்; அப்போ ஃபீல் பண்ணேன்" - மாரி செல்வராஜ்
6 months ago
7





English (US) ·