Parandhu Po: "என் மேல் ராம் சார் அன்பு வச்சிருக்கார்னு நினைச்சேன்; ஆனா..." - மிர்ச்சி சிவா

6 months ago 7
ARTICLE AD BOX

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

பறந்து போ திரைப்படம்பறந்து போ திரைப்படம்

அங்கு மிர்ச்சி சிவா பேசுகையில், "ஒரு நாள் ராம் சார் கால் பண்ணினார். அவர், 'என்னுடைய படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கணும்'னு கேட்டார்.

நான் பரீட்சையில் தோல்வி அடைந்தபோதுகூட அவ்வளவு பயந்தது கிடையாது. ஆனா, ராம் சார்கூட ஒரு படம் பண்ணப்போறோம்னு நினைக்கும்போது பயமாக இருந்தது.

'இது வேற மாதிரியான ஒரு படம். இதுவரை நானே பண்ணாத ஒரு படம். நிச்சயமாக உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்'னு சொல்லி ஒரு ஸ்கிரிப்ட் புத்தகத்தைக் கையில் கொடுத்தார். நான் ராம் சார் மாதிரி அதிகமாகப் படிக்கிற ஆள் கிடையாது.

Parandhu Po: "ஆனந்த யாழைப் பாடலை சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால்..." - இயக்குநர் ராம்

படிச்சிருந்தா அவரை மாதிரி அறிவாளியாகியிருப்பேன். பிறகு அந்தக் கதையைப் படிச்சு ரொம்ப என்ஜாய் பண்ணினேன். ராம் சார்கிட்ட கதை நல்லா இருக்குனு சொன்னேன்.

அவர் என்னைப் பார்த்துட்டு, 'இது இன்னொரு வெர்ஷன்னு' சொல்லி மற்றுமொரு பெரிய ஸ்கிரிப்ட் புத்தகத்தைக் கொடுத்தார்," என்றவர் சிரித்துக்கொண்டே, "அப்போ நான், 'கதை புரிஞ்சது, ஷூட்டிங் போயிடலாம்னு' சொன்னேன்.

என் மேல் ராம் சார் அதிகமாக அன்பு வச்சிருக்கார்னு நினைச்சேன். ஆனா, என் மேல் அவருக்கு எவ்வளவு கோபம் இருக்குனு ஷூட்டிங் போனதுக்குப் பிறகுதான் தெரிஞ்சது.

Premalu 2 Update: 'ப்ரேமலு 2' திரைப்படம் கைவிடப்படுகிறதா? - என்ன சொல்கிறார் படத்தின் தயாரிப்பாளர்
Mirchi Shiva - Parandhu PoMirchi Shiva - Parandhu Po

இந்தப் படத்தை ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிட்டோம். எங்க படத்துக்குப் பெரிய திரையுமே கிடைத்திருந்தது. இந்தப் படத்துக்கு கிடைச்ச மாதிரியான ஹவுஸ்ஃபுல் காட்சி வேற எந்தப் படத்துக்கும் கிடைக்கவில்லை.

திரைத்துறையினர் பலரும் ராம் சார் பெயர் போடும்போது ஸ்டான்டிங் ஓவேஷன் கொடுத்தாங்க. ராம் சார் இன்னும் கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர்.

அவர் நம்முடைய சொத்து. ராம் சாரை நாம் அப்படியே விட்டுவிடக் கூடாது" என்றார்.

Parandhu Po: "2009 ஈழப் பிரச்னைக்குப் பிறகு..." - இயக்குநர் ராமின் அரசியல் குறித்து மாரி செல்வராஜ்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Read Entire Article