ARTICLE AD BOX
இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'.
இத்திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இதனிடையே இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் நேற்று (ஜூன்16) வெளியானது. இந்நிலையில் இப்பாடலைப் பாராட்டி நடிகர் சூரி தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
பறந்து போஅதில், "‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் நெஞ்சைத் தொடும் பாசமிகு பாடல். இயக்குநர் ராம் ஐயா, அப்பா- மகன் பாசத்தை அற்புதமாகப் படம் பிடிக்கும் உங்கள் பார்வை எப்போதும் உண்மையும் உணர்வும் கலந்தது. உங்கள் காட்சிகள் வெறும் படம் அல்ல. நெஞ்சில் ஆழமாகப் பதிந்து, நம் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் கலை” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
#DaddyRombaPaavam – நெஞ்சைத் தொடும் பாசமிகு பாடல்! #DirectorRam ஐயா, அப்பா-மகன் பாசத்தை அற்புதமாக படம் பிடிக்கும் உங்கள் பார்வை எப்போதும் உண்மையும் உணர்வும் கலந்தது.
உங்கள் காட்சிகள் வெறும் படம் அல்ல… நெஞ்சில் ஆழமாக பதிந்து, நம் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் கலை!
… pic.twitter.com/e7NVLCeSla
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
7





English (US) ·