ARTICLE AD BOX
18-வது ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் பஞ்சாப் அணியும், சிஎஸ்கே அணியும் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கிறது.
CSK vs PBKSஅணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதைப் பிரியான்ஷ் ஆர்யா பெற்றிருக்கிறார். இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசியிருக்கும் பிரியான்ஷ் ஆர்யா, " நிகழ்கால உலகிற்கு வெளியே இருப்பது போல் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அணி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி.
அதே சமயம் இன்னும் என்னுடைய அணிக்காக வெற்றியில் அதிகம் பங்காற்ற விரும்புகிறேன். இதுதான் என்னுடைய பேட்டிங் ஸ்டைல். அதிரடியாக பேட்டிங் செய்யும் நோக்கத்துடன் விளையாடுமாறு ஸ்ரேயஸ் பைய்யா சொன்னார்.
பிரியான்ஷ் ஆர்யாஒருவேளை நான் அவுட்டானாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. நேற்றைய ஆட்டத்தில் சூழ்நிலைக்குத் தகுந்தார் போலும் விளையாட விரும்பினேன். நேஹல் வதேரா வந்த போது சிங்கிள், டபுள் ரன்களை எடுப்பது பற்றி சிந்தித்தேன்.
ஆனால் உனது உள்ளுணர்வுகளைப் பின்பற்றி தொடர்ந்து விளையாடு என்று ஸ்ரேயஸ் என்னிடம் சொன்னார். அனைத்து பவுலர்களும் நன்றாக பவுலிங் செய்தனர். அதனால் யார் வேண்டுமானாலும் எனக்கு பிரச்னையைக் கொடுக்கலாம் என்று நினைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

8 months ago
8







English (US) ·