PBKS vs CSK : சென்னையை வீழ்த்திய அந்த 24 பந்துகள்; ஸ்ரேயஸ் ஐயரின் மாஸ்டர் பிளான்

8 months ago 8
ARTICLE AD BOX

'சென்னை தோல்வி!'

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சண்டிகரின் முலான்பூரில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி வரை போராடிய சென்னை அணி நெருங்கி வந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. சென்னை அணியின் இந்த தோல்விக்கு ஒரு 24 பந்துகள்தான் காரணம். அந்த 24 பந்துகளை சரியாக ஆடியிருந்தால் சென்னை அணியால் இந்தப் போட்டியை வென்றிருக்க முடியும். எப்படி தெரியுமா?

CSKCSJ

'தோல்வியின் பின்னணி!'

பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து சென்னை அணிக்கு 220 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்தது. 2019 க்கு பிறகு சென்னை அணி 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ததே இல்லை. இந்த சீசனிலும் சேஸிங்கில் தடுமாறியே வருகின்றனர். இதை மனதில் வைத்துதான் ஸ்ரேயஸ் ஐயர் டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பிரியான்ஷின் அதிரடியால் பஞ்சாப் அணி நினைத்தபடியே சென்னை அணியால் எட்ட முடியாத ஒரு ஸ்கோரை எடுத்தனர்.

சென்னை அணி கடந்த சில போட்டிகளாக இண்டண்டே இல்லாமல் ஆடியிருந்தனர். அப்படி ஆடி தொடர்ச்சியாக தோற்றதால் இந்தப் போட்டியில் அணுகுமுறையை கடுமையாக முயன்று பார்க்க எண்ணினர். அதனால்தான் தொடக்கத்திலிருந்தே கொஞ்சம் துடிப்பாக ஆடியிருந்தனர். சென்னை அணி இதற்கு முன் தோற்றிருந்த 3 போட்டிகளிலுமே சேஸிங்கில் பவர்ப்ளேயில் 50 ரன்களை கூட தாண்டியிருக்க மாட்டார்கள். இரண்டு மூன்று விக்கெட்டுகளையும் இழந்திருப்பார்கள்.

ConwayConway

இதனாலயே ஆரம்பத்தில் மொமண்டம் கிடைக்காமல் அப்படியே போட்டியை விட்டு விடுவார்கள். ஆனால், இன்று பவர்ப்ளேயில் ரச்சினும் கான்வேயும் நன்றாக ஆடியிருந்தனர். அக்ரஸிவ்வாக ஆடியதால் பவர்ப்ளேயில் 59 ரன்களை எடுத்தனர். விக்கெட்டையும் விடவில்லை. இவர்கள் ஓரளவுக்கு நன்றாக ஆடிவிட்டதால் மிடில் ஓவர்களில் கான்வேயுடன் இணைந்து சிவம் துபேவும் போட்டி கையை விட்டு செல்லாமல் சேஸை முன்னெடுத்து சென்றார்.

'சென்னையின் சேஸிங் திட்டம்!'

சேஸிங்கில் முதல் 10 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி பேட்டி கொடுத்திருந்தார். அப்போது கடைசி 6 ஓவர்களில் 80 ரன்கள் அடிக்க வேண்டும் எனும் நிலைக்கு போட்டியை எடுத்து வந்துவிட்டால் எங்களால் வெல்ல முடியும் என்றார். பெவிலியனில் தீட்டப்பட்டிருந்த திட்டத்திற்கு ஏற்பவே கான்வேயும் சிவம் துபேவும் போட்டியை எடுத்துச் சென்றனர்.

DubeDube

14 ஓவர்கள் முடிந்திருக்கையில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்களை எடுத்திருந்தது. கடைசி 6 ஓவர்களில் சென்னையின் வெற்றிக்கு 81 ரன்கள் தேவை. அதாவது, மைக் ஹஸ்ஸி பவுண்டரி லைனுக்கு வெளியில் நின்று சொன்னதை சிஎஸ்கே செய்திருந்தது. சென்னையின் திட்டப்படி சென்னையின் கையில்தான் போட்டி இருந்தது. ஆனால், இதன்பிறகுதான் எல்லாம் மாறத் தொடங்கியது.

'பவுண்டரியே இல்லாத ஓவர்கள்!'

14 வது ஓவர் முடிந்த பிறகு ஒரு 22 பந்துகளுக்கு தொடர்ச்சியாக பவுண்டரியே இல்லை. அர்ஷ்தீப் வீசிய 15 வது ஓவரில் சரியாக 6 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. ஒரு பவுண்டரி கூட இல்லை. எல்லாமே சிங்கிள்தான். பெர்குசன் வீசிய 16 வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே இந்த ஓவரிலும் பவுண்டரி இல்லை.

FergusonFerguson

அர்ஷ்தீப் சிங், பெர்குசன் இருவருமே ஸ்லோயர் ஒன்கள், ஒயிட் அவுட் சைட் ஆப், ஸ்லோயர் ஷார்ட் பால்கள் என பவுண்டரி அடிப்பதற்குக் கடினமான பந்துகளையே வீசினர். மைதானத்தின் ஒரு பகுதி பவுண்டரி சில மீட்டர்கள் சிறியதாகவும் இன்னொரு பக்க பவுண்டரி பெரிதாகவும் இருந்தது. இதை மனதில் வைத்தே ஒயிடு அவுட் சைட் ஆப் டெலிவரிக்களை வீசினர். அது நல்ல பலனையும் கொடுத்தது.

PBKS vs CSK : 'நான் ஓப்பனிங் இறங்கப் போறதில்ல!' - ருத்துராஜ் உறுதி!

சிவம் துபே அவுட் ஆகி 16 வது ஓவரின் கடைசிப் பந்தில் தோனி வந்தார். 17 வது ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் சஹாலை கொண்டு வந்தார். சஹாலுக்கு அதுதான் முதல் ஓவர். சிவம் துபேவும் கான்வேயும் களத்தில் இருக்கும் வரை சஹாலை ஸ்ரேயஸ் ஐயர் கொண்டு வரவே இல்லை. இருவருமே இடதுகை பேட்டர்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக மேட்ச் அப்பாகவே லெக் ஸ்பின்னரான சஹால் செட் ஆகமாட்டார்.

DhoniDhoni

அதேமாதிரி, சிவம் துபே ஸ்பின்னர்களை அதிரடியாக ஆடக்கூடியவர். அதனால்தான் அவர்கள் இருவரும் களத்தில் இருக்கும் வரை தன்னுடைய முக்கியமான ஸ்பின்னரான சஹாலை கொண்டு வராமலே இருந்தார். தோனி உள்ளே வந்தவுடன் சரியாக சஹாலை கொண்டு வந்தார்.

'கவனம் ஈர்த்த ஸ்ரேயஸ்!'

லெக் ஸ்பின்னர்கள், இடது கை ஸ்பின்னர்களுக்கு எதிராகவெல்லாம் தோனி கடுமையாக திணறுவார். அதனால்தான் தோனி வந்தவுடன் சஹால் வந்தார். அந்த ஓவரிலும் 9 ரன்கள் வந்ததே தவிர, பவுண்டரி வரவே இல்லை. கான்வே எவ்வளவோ முயன்றும் பவுண்டரி அடிக்க முடியவில்லை. இப்போது தொடர்ச்சியாக 3 ஓவர்களுக்கு பவுண்டரி இல்லை.

PBKSPBKS

18 வது ஓவரை பெர்குசன் வீசுகிறார். இந்த ஓவரிலும் முதல் 4 பந்துகளில் பவுண்டரி இல்லை. அதே ஒயிடு அவுட் சைட் ஆப் ப்ளான்தான். டீப் தேர்டு மேன் மற்றும் டீப் பாய்ண்ட் வைத்துவிட்டு ஒயிடாக வீசினார். கடைசி இரண்டு பந்துகளில்தான் தோனி சிக்சர் அடித்தார். ஆக, இங்கே மட்டும் தொடர்ச்சியாக 22 பந்துகளுக்கு பவுண்டரி இல்லை. அதுபோக 14 வது ஓவரிலும் கடைசி 2 பந்துகள் பவுண்டரி இல்லை. ஆக மொத்தம் தொடர்ச்சியாக 24 பந்துகளுக்கு பவுண்டரி இல்லை.

'தோல்விக்கு வித்திட்ட 24 பந்துகள்!'

இந்த 24 பந்துகள்தான் சென்னை அணியின் மீது அழுத்தத்தை ஏற்றியது. கான்வேயால் சரியாக பந்தை கனெக்ட் செய்ய முடியவில்லையென தெரிந்து அவரை ரிட்டையர் அவுட்டே ஆக வைத்தனர். சென்னை அணி எவ்வளவு அழுத்தத்தில் இருந்தார்கள் என்பதை அந்த முடிவிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.

PBKS vs CSKPBKS vs CSK

அந்த 24 பந்துகளில் இரண்டு மூன்று பவுண்டரிக்களோ சிக்சர்களோ வந்திருந்தால் இந்தப் போட்டி சென்னையுடையது. சென்னை அணி வெற்றியடையவில்லை. ஆனால், கடந்த போட்டிகளை போல விட்டுக் கொடுக்காமல் கடைசி வரை முயன்று பார்த்தார்கள். அதுதான் ரொம்பவே முக்கியம். ஆனால், அதற்காக 2 புள்ளிகள் கொடுக்கமாட்டார்களே!

CSK வின் தோல்விக்கு என்ன காரணம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் தெரிவியுங்கள்!

Read Entire Article