PBKS vs CSK : 'நான் ஓப்பனிங் இறங்கப் போறதில்ல!' - ருத்துராஜ் உறுதி!

8 months ago 8
ARTICLE AD BOX

'டாஸ் முடிவு!'

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சண்டிகரின் முலான்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டியின் டாஸை பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஷ் வென்றார். முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். சென்னை அணி சேஸிங்கில் வீக் என்பதால் இந்த முடிவை எடுத்தார். ருத்துராஜ் கெய்க்வாட் பேசுகையில் அவர் நம்பர் 3 இல் இறங்குவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

RuturajRuturaj

'ருத்துராஜ் உறுதி!'

ருத்துராஜ் பேசுகையில், 'நாங்களும் முதலில் பேட்டிங் செய்யத்தான் நினைத்தோம். பிட்ச் வறண்டு இருக்கிறது. காற்றில் ஈரப்பதமும் அவ்வளவாக இல்லை. அதனால் முதலில் பேட் செய்யவே நினைத்தோம். இது எங்களுக்கு புதிய பிட்ச், புதிய சூழல்.

நாங்கள் இதற்கேற்றவாறு விரைவில் தகவமைத்து ஆட வேண்டும். கடந்த போட்டிகளில் பௌலிங்கின் போது இரண்டு ஓவர்களில் 15 ரன்களுக்கு மேல் கொடுத்திருக்கிறோம். அதுதான் பிரச்னை. எங்களின் பீல்டிங்கும் இன்னும் வலுப்பெற வேண்டும். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை. நான் நம்பர் 3 இல் இறங்க வேண்டும் என்பது ஏலத்தின் போதே முடிவாகிவிட்டது.

ருத்துராஜ்ருத்துராஜ்

இனி எங்களின் ஓப்பனர்கள் நன்றாக ஆடுவார்கள் என நம்புகிறேன். போட்டியை அனுபவித்து மகிழ்ந்து ஆட விரும்புகிறோம்.' என்றார்.

ருத்துராஜ் கெய்க்வாட் ஓப்பனிங் இறங்காமல் நம்பர் 3 இல் இறங்குவதைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.

PBKS vs CSK : தோல்வியைத் தவிர்க்க இந்த 3 விஷயத்தை செய்யுங்க CSK - Analysis
Read Entire Article