ARTICLE AD BOX
ஐபிஎல் இன்றைய (ஏப்ரல் 5) போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் நேருக்கு நேர் களமிறங்கின. காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்படாமல் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டும் செய்துவந்த சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாகத் திரும்பியிருக்கிறார்.
மறுபக்கம், முதல் இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றியை இந்தப் போட்டியிலும் தொடரும் முனைப்பில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்தார்.
PBKS vs RR - ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன்அதைத்தொடர்ந்து பேசிய ஸ்ரேயஸ் ஐயர், ``கடந்த ஆட்டத்தைப் பார்க்கையில் புதிய பிட்சில் ஆடுகிறோம். பிட்சின் தன்மை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க விரும்புகிறோம். நாங்கள் இங்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியிருப்பதால் பிட்ச் எப்படி செயல்படும் என்பது எங்களுக்குத் தெரியும். சாம்பியன்களின் மனநிலை எங்களிடம் இருக்கிறது. அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஒருவேளை, இம்பேக்ட் பிளேயருடன் மாற்றம் கொண்டுவரப்படலாம்" என்று கூறினார்.
Rishabh Pant: ``ரிஷப் பண்ட்டை அப்படிச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை'' - LSG சஞ்சீவ் கோயங்காஅவரைத்தொடர்ந்து பேசிய சஞ்சு சாம்சன், ``அணிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி. இதுவொரு புதிய அணி, புதிய நிர்வாகம். ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள கொஞ்சம் நேரம் எடுக்கும். நாங்கள் இப்போது சிறப்பாக விளையாடி வருகிறோம். கடந்த ஆட்டம் எங்களுக்கு சரியான ஆட்டமாக இருந்தது. துஷார் தேஷ்பாண்டேவுக்குப் பதில் யுத்விர் சிங் களமிறங்குவர்" என்று கூறினார்.
PBKS vs RR - ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன்பஞ்சாப் பிளெயிங் 11:
பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயஸ் ஐயர் (c), மார்கஸ் ஸ்டய்னிஸ், நேஹல் வதேரா, மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ யன்சன், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல்
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
பிரியன்ஸ் ஆர்யா, ஹர்ப்ரீத் ப்ரார், பிரவீன் துபே, விஷ்ணு வினோத், வைஷாக் விஜய்குமார்
ராஜஸ்தான் பிளெயிங் 11:
ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(c), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜோரல், ஷிம்ரோன் ஹெட்மயர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, யுத்வீர் சிங் சரக், சந்தீப் சர்மா
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
குணால் சிங் ரத்தோர், ஷுபம் துபே, ஃபசல்ஹக் ஃபரூக்கி, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்
CSK vs DC: 'டெஸ்ட் மேட்ச் ஆடுற இடம் இது இல்ல தோனி & கோ'- சென்னையின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன?Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


8 months ago
8







English (US) ·