PBKS Vs RR: "ஆர்ச்சர் - சந்தீப் சர்மா கூட்டணி அபாயகரமான கம்போ" - வெற்றி குறித்து சஞ்சு சாம்சன்

8 months ago 8
ARTICLE AD BOX

ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, பஞ்சாப் பந்துவீச்சாளர்களை சிறப்பாகக் கையாண்டு 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 67 ரன்கள் அடித்தார்.

PBKS vs RRPBKS vs RR

அதையடுத்து, 206 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப், ராஜஸ்தானின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டும் அடித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

போட்டிக்குப் பின்னர் வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ``பவர்பிளேயில் நான் ஸ்டார்ட் செய்த விதத்தில் கொஞ்சம் ஸ்லோவாக ரன்கள் சேர்ப்பதாக நினைத்தோம். ஆனால், எங்களின் தரமான பேட்ஸ்மேன்களால் 205 என்ற நல்ல ஸ்கோரை எட்டினோம். இளம் பேட்ஸ்மேன்கள் லைன் அப்.

PBKS vs RRPBKS vs RR

இளம் வீரர்களாக இருந்தாலும் இந்திய அணியில் நிறைய போட்டிகளில் விளையாடியிருக்கின்றனர். போட்டியை சிறப்பாக எதிர்கொண்டனர். பந்துவீச்சில், ஆர்ச்சர் - சந்தீப் சர்மா ஒரு அபாயகரமான காம்போ. பிரஷர் ஓவர்களில் அவர்களை நான் சற்று அதிகமாகவே நம்பலாம். ஆர்ச்சர் வேகமாக பந்துவீசுவதைப் பார்க்க நாம் அனைவருமே விரும்புகிறோம். டைம்அவுட்டில் நாங்கள் ஒரு சிறிய சந்திப்பை நடத்தினோம்.

ஆர்ச்சர்ஆர்ச்சர்

அப்போது, அவர்கள் (பஞ்சாப்) சிறப்பான அணி, நாம் இதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றேன். கடைசி பந்து வீசப்படும்வரை வெற்றிக்கு உத்தரவாதம் தர முடியாது. எங்களுடைய செயல்பட்டில் முழுமையாக கவனம் செலுத்தினோம். முடிவை அது பார்த்துக்கொண்டது. சிறந்த காம்பினேஷன், லைன்அப்ஸ், பேட்டிங் ஆர்டர் ஆகியவற்றைக் கண்டறியாக கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டோம். இது நீண்ட தொடர் என்பதால் காயங்களில் கவனமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

CSK vs RR: Ruturaj Gaikwad’s Mistakes Exposed - Commentator Muthu Interview | IPL | Dhoni
Read Entire Article