Phoenix: "ரொம்ப வீக்கா ஃபீல் பண்ணினேன்..." - மனம் திறந்த சூர்யா சேதுபதி!

6 months ago 7
ARTICLE AD BOX

நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் அனல் அரசு இயக்கியுள்ள பீனிக்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய சூர்யா சேதுபதி, "இந்த 2 வருஷ ப்ராசஸ்ல, நிறைய சர்ச்சைகள், ஷூட்டிங், படம் ரிலீஸ் ஆகுமான்னு வந்த பிரச்னைகள் எல்லாத்துல இருந்தும் ஒன்னொன்னு கத்துகிட்டோம். ஒவ்வொன்னையும் பாடமா எடுத்துகிட்டது எனக்கு சந்தோஷமா இருந்தது. 

சூர்யா சேதுபதிசூர்யா சேதுபதி

இந்த பிரஸ், என்னுடைய சக நடிகர்கள், குடும்பம், நண்பர்கள்தான் நான் இன்னைக்கு இங்க இருக்க காரணம். இன்னும் எட்டு நாள்ல படம் ரிலீஸ். 

என் குரு அனல் அரசு சார்தான்

கூட நடிச்ச தேவதர்ஷினி மேம், சம்பத் சார், ஹரிஷ் உத்தமன் சார், முத்துக்குமரன் அண்ணா எல்லோருக்கும் நன்றி. 

நான் எப்போதுமே ரொம்ப வீக்கா ஃபீல் பண்ணிருக்கேன். அந்த சர்ச்சைகள் வந்தபிறகு நாம இத ஸ்ட்ராங்கா பண்ணிடுவோமான்னு குழப்பம் இருந்துடே இருக்கும். உள்ள வீக்கா ஃபீல் பண்ணினாலும் அத யார்கிட்டயும் காட்ட முடியாது. ஆனா கூட நடிச்சவங்க அத புரிஞ்சுகிட்டு ஒவ்வொரு சீன்லயும் தூணா இருந்தாங்க. 

முக்கியமா தேவதர்ஷினி மேம். அவங்க படத்துல மட்டுமில்ல நிஜத்துலயும் எனக்கு அம்மாதான். 

என் தயாரிப்பாளர் ராஜலெட்சுமி மேம், இந்த சர்ச்சைகள் நடந்தபோது அவங்க என்னை ஜட்ஜ் பண்ணியிருக்கலாம். ஆனா அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லாமல் கூட துணையா இருந்தாங்க. 

எனக்கு எல்லாமே சொல்லிகொடுத்தது என் குரு அனல் அரசு சார்தான். என் உடையில இருந்து நான் நடிக்கிற ஸ்டைல் வரை எல்லாமும் அவரால்தான். ஜூலை 4 படம் வருது பாருங்க. உங்க (ஆடியன்ஸ்) கருத்துக்களைக் கேட்க ஆவலா இருக்கேன்." எனப் பேசினார்.

AR Rahman: "ரஹ்மான் ஒரு வெளிச்சம்; பள்ளி சிறுவன் போல இருக்கிறார்" - இசைப் புயலை வியந்த இந்தி பாடகி!
Read Entire Article