Prabhu Deva: `இது நடனத்தையும் தாண்டியது' - மகனை அறிமுகப்படுத்தி பிரபு தேவா நெகிழ்ச்சி

10 months ago 9
ARTICLE AD BOX

பிரபுதேவாவின் டான்ஸ் கான்சர்ட் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. தனுஷ், வடிவேலு உட்பட சினிமா நட்சத்திரங்களும் சிலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

`ரெளடி பேபி' பாடலுக்கு தனுஷும் பிரபுதேவாவும் மேடையில் நடனமாடிய காணொளியும் இணையத்தில் வைரலானது. அதே போல, `பேட்ட ராப்' பாடலுக்கு வடிவேலுவும் பிரபு தேவாவும் செய்த க்யூட் மொமன்ட்டும் இந்த நிகழ்வின் ஒரு முக்கியமான ஹைலைட்! இதே நிகழ்வில் பிரபு தேவா தன் மகனையும் மக்களிடையே அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த மேடையில் தன் மகனுடன் இணைந்து `பேட்ட ராப்' பாடலுக்கு நடனமாடியிருந்தார் பிரபுதேவா. தற்போது தன் மகனை அறிமுகப்படுத்தியது குறித்தும், அவரைத் தொடர்ந்து அவரின் மகனும் நடனத்தின் பக்கம் வருவது குறித்தும் பதிவிட்டிருக்கிறார் பிரபு தேவா.

இந்தப் பதிவில் அவர், ``எனது மகன் ரிஷி ராகவேந்திரா தேவாவை அறிமுகப்படுத்துவதில் பெருமைகொள்கிறேன். முதல் முறையாக இந்த மேடையில் நாங்கள் ஸ்பாட்லைட்டை பகிர்ந்திருந்தோம். இந்த விஷயம் நடனத்தையும் தாண்டியது. மரபு, பேரார்வம் மற்றும் பயணம் தற்போது தொடங்கியிருக்கிறது." என நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Read Entire Article