ARTICLE AD BOX

ஈஸ்ட் ரூதர்போர்ட்: நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி ஜூலை 14-ம் தேதி இரவு 12.30 மணிக்கு அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பிஎஸ்ஜி மற்றும் செல்சீ அணிகள் விளையாடுகின்றன.
அமெரிக்காவில் ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள் பங்கேற்றன. மொத்தம் 62 போட்டிகள். இதன் இறுதிப் போட்டிக்கு ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிஎஸ்ஜி மற்றும் செல்சீ அணிகள் முன்னேறின. அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கு வெள்ளோட்டமாக இந்த தொடர் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டது.

5 months ago
6







English (US) ·