ARTICLE AD BOX
`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தவிர ரஜினிகாந்த் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
கூலி திரைப்படம்பலரும் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாருமான ஓ.பன்னீர்செல்வம் ரஜினிகாந்த்தின் 50 ஆண்டுக்கால சினிமா பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "1975 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரை 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ஐம்பதாண்டுக் காலம் திரையுலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்ற எனது இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது பாராட்டுகள். அவர் மேலும் பல்லாண்டுகள் நல்ல தேக ஆராக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து, மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நல்வாழ்த்துகள்" என்று வாழ்த்தியுள்ளார்.
Coolie Review: ரஜினி - லோகேஷ் `பவர்ஹவுஸ்' காம்போ; ஆச்சர்ய ப்ளாஷ்பேக்; ஆனால்... படமாக எப்படி?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

4 months ago
6





English (US) ·