ARTICLE AD BOX
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவர் நடிகர் ராஜேஷ். 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார்.
நடிப்பதைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்ட இவர் மே 29 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.
சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இவருக்கு இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.
நடிகர் ராஜேஷ்அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ராஜேஷ் எளிமையான மனிதர். அவருக்கு நண்பர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர்.
`ஒரு நடிகரோட வாழ்க்கையில் இந்த 5 பேர் சரியா இருந்தா சக்சஸ் தான்’ - நடிகர் ராஜேஷ் பேட்டியிலிருந்து..!முதல்வர் ஸ்டாலின் முதல் இளையராஜா வரை பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். இதுவே அவர் எப்படி வாழ்ந்திருக்கிறார் என்பதற்குச் சான்று. அவருக்குத் தெரியாத விஷயங்களே கிடையாது. நல்ல மனிதராக வாழ்ந்திருக்கிறார்.
ரஜினிகாந்த் என்னை அடிக்கடி சந்தித்து, நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கூறி அதற்கு, என்னென்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று கூறுவார். நல்ல மனிதர். அவரை இழந்தது ஒரு பேரிழப்பு” என்று தன்னுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் மரணம்; low BP தான் காரணமா, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
8





English (US) ·