ARTICLE AD BOX
இந்தாண்டு தொடக்கத்திலிருந்து ஃபயர் மோடில் பரபரப்பாக இயங்கி வருகிறார் ரவி மோகன்.
புத்துணர்ச்சியுடன் இந்தப் புதிய வருடத்தைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய ஜெயம் ரவி என்கிற பெயரை ரவி மோகன் என்று மாற்றியிருந்தார்.
பெயரை மாற்றிய அதே ஜனவரி மாதத்தில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் நடித்திருந்த 'காதலிக்க நேரமில்லை' திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
Ravi Mohanஇத்திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, 'டாடா' இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் 'கராத்தே பாபு' படத்தின் போஸ்டர், காணொளிகள் எல்லாம் வெளியாகி, அப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
இதைத் தாண்டி, கடந்தாண்டு இறுதியில் சிவகார்த்திகேயனுடன் 'பராசக்தி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்து, பலரையும் ஆச்சரியப்படுத்தினார் ரவி மோகன்.
இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்கியிருக்கிறார் ரவி மோகன். ரவி மோகனின் இந்தப் பரிணாமத்தைக் காணப் பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
மேலும், ரவி மோகனின் 32-வது திரைப்படமான 'ஜீனி' படம் குறித்து 2023-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அர்ஜூனன் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படமும் ஒருபுறம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் தேவையானி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன் எனப் பல நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர்.
முக்கியமாக, ரவி மோகனின் சகோதரர் மோகன் ராஜா இயக்கத்திலும் அவர் 'தனி ஒருவன் 2' படத்தில் நடிக்கவிருப்பதாக முன்பே தகவல் வெளியாகியிருந்தது.
முதல் பாகத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம்தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவிருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகவிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
Kubera: "7 மணிநேரம் நானும் ராஷ்மிகாவும் குப்பை கிடங்கில் நடித்தோம்" - குபேரா அனுபவம் பகிரும் தனுஷ்இந்தப் பட்டியலைத் தாண்டி, 'டிக்கிலோனா', 'வடக்குப்பட்டி ராமசாமி' ஆகிய படங்களை இயக்கிய கார்த்தி யோகி இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கிறார்.
இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு 'ப்ரோ கோட்' என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதில் முக்கியமான மற்றொரு விஷயமும் இருக்கிறது.
ஆம், இந்த வருடம் ரவி மோகன் தயாரிப்பாளராகவும் களமிறங்கியிருக்கிறார். 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற தன்னுடைய பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.
யோகி பாபுஇந்த நிறுவனத்தின் மூலம்தான் கார்த்தி யோகி இயக்கும் 'ப்ரோ கோட்' படத்தைத் தயாரிக்கிறார்.
பெயர் மாற்றம், தயாரிப்பாளர் என இந்த வருடத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கும் ரவி மோகன், இயக்குநராகவும் கூடிய விரைவில் களமிறங்குகிறார்.
யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தை ரவி மோகன் இயக்கவிருக்கிறார். சமீபத்தில் நடந்த விகடன் பிரஸ் மீட்டில் இந்தத் தகவலை யோகி பாபு எக்ஸ்க்ளூசிவாகப் பகிர்ந்திருந்தார்.
Ravi Mohan: "கடவுளின் அருளால் அனைத்தும் நன்றாக நடக்க வேண்டும்"- நடிகர் ரவி மோகன்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
7





English (US) ·