ARTICLE AD BOX
நடிகர் ரவி மோகன் இப்போது இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என வெவ்வேறு அவதாரங்களை எடுத்திருக்கிறார்.
தயாரிப்பாளராக அவர் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்கிற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார்.
தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவையும் நேற்றைய தினம் பிரமாண்டமாக சென்னையில் நடத்தியிருந்தார்.
Ravi Mohan - Geneliaகார்த்தி, சிவகார்த்திகேயன் உட்பட கோலிவுட்டின் பல முக்கிய நட்சத்திரங்களும் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தார்கள்.
நடிகை ஜெனிலியாவும் தனது கணவர் ரித்தீஷுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தின் முக்கியக் காட்சியை இங்கு ரீ-கிரியேட் செய்தது இந்த விழாவின் முக்கிய ஹைலைட்!
அத்துடன் தனது தாயார் வரலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஒரு பரிசு கொடுப்பதற்காக அவரை மேடையில் ஏற்றினார் ரவி மோகன்.
அங்கு ரவி மோகன் குறித்து எமோஷனலாகவும் அவர் பேசியிருந்தார். இந்த நிகழ்வில் பாடகி கெனிஷாவும் கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் தன்னுடைய வாழ்வின் முக்கியமான மூன்று பெண்கள் கலந்துகொண்டது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார் ரவி மோகன்.
அந்தப் பதிவில் அவர், "அம்மா, கென்னு (கெனிஷா) மற்றும் என் நீண்ட கால நண்பரான ஜென்னி (ஜெனிலியா) என என்னை மென்மையான அன்பாலும் கருணையாலும் ஆசீர்வதித்த மூன்று பெண்கள். ஆரம்பம் முதல் இன்று வரை அவர்கள் தொடர்ந்து அழகாக அதைச் செய்கின்றனர்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

4 months ago
6





English (US) ·