Ravi Mohan: "கடவுளின் அருளால் அனைத்தும் நன்றாக நடக்க வேண்டும்"- நடிகர் ரவி மோகன்

6 months ago 8
ARTICLE AD BOX

தென்னிந்திய ஸ்ட்ரீட் கிரிக்கெட் லீக் (Southern Street Premier League) நிகழ்ச்சி ஒன்றில் ரவி மோகன் கலந்துகொண்டிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி மோகன், “ என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு மிக்க நன்றி. எனக்கு கிரிக்கெட் என்றால்  மிகவும் பிடிக்கும். பள்ளி, கல்லூரிகளில் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறேன்.

ரவி மோகன் ரவி மோகன்

கிரிக்கெட் நன்றாக விளையாடக்கூடிய சிலருக்கு ஒரு எல்லையைத் தாண்டி போகமுடியாத சூழல் இருக்கும். அப்படி ஒரு சூழலை தென்னிந்திய தெரு கிரிக்கெட் லீக் உடைத்திருக்கிறது. அதனால் இளைஞர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்று, பயன்படுத்திக் கொள்ளவேண்டும். 

கிரிக்கெட் முதன்முதலில் தெருக்களில் தான் ஆரம்பித்தது. அது அனைவருக்கும் தெரியும். இதனை ஒரு கொண்டாட்டமாக நான் பார்க்கிறேன். கடவுளின் அருளால் அனைத்தும் நன்றாக நடக்க வேண்டும்.

ரவி மோகன் ரவி மோகன்

பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்துள்ளீர்கள். கன்னடம், மலையாளம் மொழிகள் எனக்கு புரியுமே தவிர, பேசத் தெரியாது. ஆனால் தெலுங்கு கொஞ்சம் கொஞ்சம் பேசத் தெரியும்” என்றிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article