ARTICLE AD BOX
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ரவீந்திர டேஜா, டெஸ்ட் கிர்க்கெட்டில் ஆல் ரவுண்டராக யாராலும் முறியடிக்க முடியாத சாதனையைப் படைத்தார்.
ஐபிஎல் சீசன் நடந்துகொண்டிருக்கையில் டெஸ்டில் இவ்வளவு பெரிய சாதனையை எப்படிப் படைத்திருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால் இந்த சாதனை அப்படிப்பட்டது!
டெஸ்ட் கிரிக்கெட்டின் தனிப்பட்ட தரவரிசையில், நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக 1151 நாள்கள் நிலைத்திருந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா என்பதுதான் அந்த சாதனை.
ஜடேஜா இந்தியாவின் டெஸ்ட் கேப் நம்பர் 275 ரவீந்திர ஜடேஜா. இவர் தனது கணிக்க முடியாத சுழற்பந்து மற்றும் பேட்டிங் திறமை மூலம் இந்திய டெஸ்ட் வரலாற்றில் அழுத்தமாக தன் பெயரை பதிந்துள்ளார்.
ஒரு இடத்தை அடைவதை விட அதில் நிலைத்திருப்பதே பெரிய விஷயம் என்பர். ஜாடேஜா வேறேந்த வீரரும் நிலைத்திருக்காத அளவு நீண்ட நாள்கள் நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக இருந்துள்ளார்.
எந்த சூழலிலும் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எதற்கும் அணி இவரை நம்பியிருக்கலாம் எனக் கூறும் அளவி கன்சிஸ்டண்டாக விளையாடிய வீரர் ஜடேஜா.
எந்த மைதானத்திலும் தனது அத்தியாவசியமான அரைசதம் அல்லது ஆட்டத்தைத் திருப்பும் 5 விக்கெட்டுகள் மூலம் ஆதிக்கம் செலுத்திய வரலாறு இவருக்கு உள்ளது.
Ravindra Jadeja -வை பின்னுக்குத் தள்ளுவாரா வங்கதேச வீரர்?
Mehidy Hasan Mirazஜடேஜாவின் ஆதிக்கம் முதலிடத்தில் இருந்தாலும், அமைதியாக தனக்கென இடத்தை பிடித்து, தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளார் வங்கதேச வீரர் மெஹிடி ஹசன் மிராஸ்.
இவர், ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் 116 ரன்கள் எடுத்ததுடன் பௌலிங்கில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அவரது கெரியரிலேயே அதிகபட்சமாக 327 புள்ளிகளை பெற்றுள்ளார்.
ஜடேஜாவை விட 73 புள்ளிகள் முன்னிலையில் 400 புள்ளிகளில் உள்ளார். புதிய போட்டியாளராக வந்துள்ள இந்த 27 வயது இளைஞர் ஜடேஜாவுக்கு சவாலாக இருப்பாரா? அல்லது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இவரை இன்னமும் பின்னுக்குத்தள்ளுவாரா ஜடேஜா என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.
IPL 2025: "உங்கள் அணி கோப்பை வெல்லாதபோது, நீங்கள் 800 ரன்கள் அடித்தாலும் பயன் இல்லை" - ரோஹித் சர்மா
7 months ago
8







English (US) ·