RCB event stampede: "நிகழ்ச்சி ஏற்பாட்டில் குறை; இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு புதிய விதிகள்.." - BCCI

6 months ago 8
ARTICLE AD BOX

ஆர்சிபி அணி நேற்று தனது முதல் கோப்பையை வென்ற நிலையில், அவசரமாக அவசரமாக இன்றே ஆர்.சி.பி வீரர்களை சிறப்பிக்க சட்டமன்ற வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது.

மேலும், மாநில கிரிக்கெட் சங்கமும் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்.சி.பி அணி வீரர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது.

பெங்களூருபெங்களூரு

இதனால், சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிய பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

முறையான திட்டமிடல் இன்றி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ததே இந்த சோக சம்பவத்துக்கு காரணம் என்று மாநில அரசின் மீதும், அணி நிர்வாகத்தின் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

பிசிசிஐபிசிசிஐ

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து இந்தியா டுடே ஊடகத்திடம் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "இந்த சம்பம் மிகவும் துரதிர்ஷ்டமானது.

நிகழ்ச்சி ஏற்பாட்டில் சில குறைகள் இருப்பதாக நினைக்கிறேன். அதேசமயம் இந்த விவகாரத்தில் பிசிசிஐ-க்கு எந்த பங்கும் இல்லை.

ஆனால், இது நமக்கு ஒரு பாடம். இதுபோன்ற வெற்றி கொண்டாட்டங்களுக்கு புதிய விதிகளை உருவாக்குவது குறித்து நாங்கள் ஆராய்வோம். நிகழ்ச்சி சிறப்பாகத் திட்டமிடப்பட்டிருக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

RCB Parade: சின்னசாமி ஸ்டேடியம் கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழப்பு? - வெற்றிக் கொண்டாட்டத்தில் சோகம்!
Read Entire Article