ARTICLE AD BOX
ஆர்சிபி அணி நேற்று தனது முதல் கோப்பையை வென்ற நிலையில், அவசரமாக அவசரமாக இன்றே ஆர்.சி.பி வீரர்களை சிறப்பிக்க சட்டமன்ற வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது.
மேலும், மாநில கிரிக்கெட் சங்கமும் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்.சி.பி அணி வீரர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது.
பெங்களூருஇதனால், சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிய பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
முறையான திட்டமிடல் இன்றி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ததே இந்த சோக சம்பவத்துக்கு காரணம் என்று மாநில அரசின் மீதும், அணி நிர்வாகத்தின் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
Seven people died in a stampede in Karnataka. It’s heartbreaking to see such loss because of poor planning and crowd mismanagement. The state government in Karnataka has clearly failed in its responsibility.
Celebrations is one thing, but the State government without proper…
இந்த நிலையில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "மோசமான திட்டமிடல் மற்றும் தவறான கூட்ட நெரிசல் மேலாண்மை காரணமாக இதுபோன்ற இழப்பைக் காண்பது வேதனையளிக்கிறது.
கர்நாடக அரசு தனது பொறுப்பிலிருந்து தவறிவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. கொண்டாட்டம் ஒரு விஷயம்தான், ஆனால் அரசு இதில் அவசரகதியில் துரதிர்ஷ்டவசமான முடிவை எடுத்திருக்கிறது.
அரசு இதைத் தவிர்த்திருக்கலாம். எனவே அரசுதான் இதற்குப் பொறுப்பு. அவர்கள்தான் இதைச் சரிசெய்ய வேண்டும்." என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
RCB event stampede: "நிகழ்ச்சி ஏற்பாட்டில் குறை; இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு புதிய விதிகள்.." - BCCI
6 months ago
8







English (US) ·