RCB v PBKS: 'தோத்துகிட்டே இருக்கியேடா' - சொந்த மண்ணில் RCB ஹாட்ரிக் தோல்வி; பஞ்சாப் வென்றதெப்படி?

8 months ago 8
ARTICLE AD BOX

ஐபிஎல் 2025-ன் 34-வது போட்டி பெங்களூரிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியக்கும் இடையே நேற்று நடைபெற்றது (ஏப்ரல் 18). மழையின் காரணமாக போட்டி 14 ஓவர்கள் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது. பவர்பிளே ஓவர்ஸ் 6-லிருந்து 4-ஆகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பெங்களூருவை பேட் செய்ய அழைத்தது.

ஸ்ரேயஸ் ஐயர் - ரஜத் பட்டிதார்ஸ்ரேயஸ் ஐயர் - ரஜத் பட்டிதார்

49-க்கு ஆல் அவுட் சாதனையை முறியடிக்கப் பார்த்த ஆர்.சி.பி!

தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட், விராட் கோலி ஆகியோர் களமிறங்க, அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார் சால்ட். ஆனால், அதே ஓவரின் நான்காவது பந்தில் டாப் எட்ஜ் ஆகி அவர் அவுட் ஆனார். மீண்டும் மூன்றாவது ஓவரில் வந்த அர்ஷ்தீப் சிங், இம்முறை கோலியை பெவிலியனுக்கு அனுப்பி சின்னசாமி மைதானத்தை நிசப்தமாக்கினார்.

பவர் பிளேயின் கடைசி பந்தில் பார்லட், "நண்பா, உனக்கு இன்னொரு அதிர்ச்சி" என்று லிவிங்ஸ்டனை 4(6) ரன்களில் ஆகாய மார்க்கமாக கேட்ச் மூலம் வெளியேற்றினார். நான்கு ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 26-3 என்று திணறியது. இதை மேலும் சோதிக்கும் விதமாக, ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்து ஜிதேஷ் 2(7), குருணல் பாண்டியா 1(2) ஆகியோர் வந்த வேகத்தில் அவுட் ஆனார்கள்.

அர்ஷ்தீப் சிங் - PBKSஅர்ஷ்தீப் சிங் - PBKS

ஓரளவு நம்பிக்கை அளித்த ரஜத் படிதார் 23(18) ரன்களில் வெளியேற, ஆர்.சி.பி 49 ரன்களுக்கு ஆல் அவுட் என்ற மோசமான சாதனைக்கு ஆபத்து ஏற்பட்டது. அடுத்து வந்த இம்பாக்ட் சப் மனோஜ் 1 ரன், யாஷ் தயால் டக் என பெவிலியனுக்கு திரும்ப, அந்த ஆபத்து மேலும் அதிகரித்தது.

``RCB ரசிகர்கள் அணியை விமர்சிக்கலாம்; ஆனால், கைவிட்டு விடக்கூடாது..'' - அஷ்வின் கருத்து

கடைசி நேரத்தில் காப்பாற்றிய டிம் டேவிட்!

பாப்பம்பட்டி அணியை விட பரிதாப நிலைக்கு ஆர்.சி.பியின் ஆட்டம் செல்ல, ஒன்பதாவது விக்கெட்டுக்கு புவனேஷ்வர் குமாருடன் ஜோடி சேர்ந்த டிம் டேவிட், 49 ரன்களைத் தாண்டி மானத்தைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், கிடைத்த வாய்ப்புகளில் பவுண்டரிகளைப் பறக்கவிட்டார். இந்தச் சூழலில் புவனேஷ்வர் குமார் 8(13) ரன்களில் அவுட் ஆனார்.

டிம் டேவிட் - RCBடிம் டேவிட் - RCB

பந்துகளுக்கு ஏற்ற ரன்களாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்த ஆர்.சி.பி ரசிகர்களுக்கு, ப்ரார் வீசிய கடைசி ஓவர் ஆறுதலாக அமைந்தது. அதில், ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து ஆர்பரிக்க வைத்த டிம் டேவிட், கடைசி வரை களத்தில் நின்று 26 பந்துகளில் அரை சதம் அடித்து 95-9 என்ற கௌரவமான ஸ்கோருக்கு அணியைக் கொண்டு வந்தார். டிம் டேவிட் ஆடிய ஆட்டத்துக்கு யாராவது ஒருவர் பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தால், இன்னும் அதிக ரன்கள் சேர்ந்திருக்கும். வந்த அனைவரும் லாஃப்ட் ஷாட்டுகளில் கவனம் செலுத்தி, இரட்டை இலக்கை கூட அடிக்காமல் விக்கெட்டுகளை எளிதாக இழந்தனர். குறிப்பாக, ஜிதேஷ், படிதார் ஆகியோரில் ஒருவராவது நிதானம் காட்டியிருக்கலாம். அதேபோல, கேப்டன் ஸ்ரேயாஸ் கடைசி ஓவரை வீச ஸ்டோய்னிஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளருக்கு பதிலாக ஸ்பின்னரைத் தேர்ந்தெடுத்தது, அதிக ரன்கள் கிடைக்கக் காரணமாக அமைந்தது.

மொமன்ட்டம் ஏற்படுத்திக் கொடுத்த புவி - ஹேசில்வுட்!

ஓவருக்கு 7 ரன்களுக்கு குறைவான எளிய இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப். முதல் ஓவரில் மூன்று ரன்களை மட்டுமே கொடுத்த புவனேஷ்வர் குமார், தனது இரண்டாவது ஓவரில் பிரப்சிம்ரனுக்கு பேக் டு பேக் இரண்டு பவுண்டரிகளை வழங்கினார். இருப்பினும், அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டையும் வீழ்த்தினார். இதேபோல, நான்காவது ஓவரில் ஹேசில்வுட்டை சிக்ஸருக்கு விரட்டிய பிரயான்ஷ் ஆர்யாவும் அடுத்த பந்தில் டிம் டேவிடிடம் கேட்ச் ஆனார்.

ஹேசில்வுட், கோலி - RCBஹேசில்வுட், கோலி - RCB

பவர் பிளே முடிவில் நான்கு ஓவர்களில் 33-2 என்ற நிலைக்கு வந்தது பஞ்சாப். அடுத்த மூன்று ஓவர்களுக்கு ஆர்.சி.பி-க்கு விக்கெட்டுகள் எதுவும் வரவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் சீராக 50-2 என்று பாதி இலக்கைத் தாண்ட, எட்டாவது ஓவரை வீசிய ஹசல்வுட் அதே ஓவரில் இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஆட்டத்தில் இன்னும் உயிர் இருப்பதாக ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

Chahal : `அவனுக்கு பயமில்ல அதுதான் அவன் பலம்' சஹாலை அதிகம் கொண்டாட வேண்டும்' - ஏன் தெரியுமா?

ஆர்.சி.பி ரசிகர்களை சைலண்ட்டாகிய பஞ்சாப்!

இந்த இடத்தில், ரஜத் படிதார் மறுமுனையில் புவனேஷ்வர் குமார் அல்லது யாஷ் தயாளை வைத்து தாக்குதல் செய்யாமல், சுயாஷ் சர்மாவை அழைத்தது நெஹல் வதேராவுக்கு சாதகமாக அமைந்தது. அவர் வீசிய 9-வது, 11-வது ஓவர்களை இலக்காகக் கொண்டு சிக்ஸர்களும், ஃபோர்களும் பறக்கவிட்டார் வதேரா. இதற்குப் பிறகு வீச வந்த புவனேஷ்வர், ஷஷாங்கின் 1(5) விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால், அது காலம் கடந்த விக்கெட்டாக இருந்ததால் எந்தப் பலனையும் தரவில்லை.



Nehal Wadhera is in a hurry to finish it for #PBKS

Updates ▶ https://t.co/7fIn60rqKZ #TATAIPL | #RCBvPBKS | @PunjabKingsIPL pic.twitter.com/upMlSvOJi9

— IndianPremierLeague (@IPL) April 18, 2025

12.1 ஓவர்களில் இலக்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் எட்டியது பஞ்சாப். கடைசி வரை களத்தில் நின்ற வதேரா 33(19) ரன்களுடன் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. ஆர்.சி.பி தற்போது நான்கு வெற்றிகள், மூன்று தோல்விகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஹோம் கிரவுண்ட் பரிதாபங்கள் அந்த அணியை இன்னும் தொடர்ந்து கொண்டே வருகிறது.

இரு அணிகளும் நாளை மறுநாள் மற்றொரு போட்டியில் மீண்டும் மொத்தவுள்ளன. ஆர்.சி.பி இந்த தோல்விக்கு பழிதீர்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Dhoni: "தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!" - நினைவுகள் பகிரும் மோஹித் சர்மா
Read Entire Article