ARTICLE AD BOX
2025 ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியும் டெல்லி அணியும் மோதின. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.
கே.எல்.ராகுல் தனியாளாக அதிரடிக் காட்டி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருந்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார்
KL Rahul இந்நிலையில் அணியின் வெற்றி குறித்துப் பேசிய கே.எல்.ராகுல், "பிட்ச் கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது. ஆனால், நான் 20 ஓவர்களுக்கு ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்று கீப்பிங் செய்திருந்தேன்.
அதனால், இந்த பிட்ச்சில் பந்து எப்படி நகர்கிறது என்பதைப் பற்றிய புரிதல் கிடைத்தது. இந்த மாதிரியான பிட்ச்சில் சிக்சர்களை அடிக்க நினைத்தாலும் எந்தத் திசையில் அடிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.
என்னுடைய கேட்ச் ட்ராப் ஆனது ஒரு அதிர்ஷ்டம்தான். இது என்னுடைய சொந்த ஊர். என்னுடைய சொந்த மைதானம்.நான் இங்கேதான் கிரிக்கெட் ஆடி வளர்ந்தேன். வேறு யாரையும் விடவும் இந்தப் பிட்ச்சைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.
KL Rahulவெவ்வேறு பிட்ச்களுக்கு ஏற்ப ஒரு பேட்டராக எப்படித் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலேயே பயிற்சியில் அதிகம் கவனம் செலுத்துவேன்.
வலைப்பயிற்சியின்போது புதிது புதிதாக நிறைய விஷயங்களை முயன்று பார்ப்பேன்" என்று பேசியிருக்கிறார்.
Dhoni: `Red Dragon is Back' - `கேப்டன்' தோனியின் CSK எப்படியிருக்கும்? - இதையெல்லாம் சரிசெய்வாரா?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

8 months ago
8







English (US) ·