RCB Vs GT: `சின்னச்சாமி ஸ்டேடியம் சில சமயங்களில் இப்படி இருக்கும்!' - கில் சொல்லும் ரகசியம்

8 months ago 8
ARTICLE AD BOX

நேற்று( ஏப்ரல் 2) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

இதில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அணியின் வெற்றி குறித்து சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

rcb vs gt

"நேற்று நாங்கள் செயல்பட்ட விதம் நன்றாக இருந்தது. குறிப்பாக பெங்களூர் அணியை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மைதானத்தில் (சின்னச்சாமி ஸ்டேடியம்) சில நேரங்களில் பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்டில் கொஞ்சம் உதவி இருக்கும். வேறொரு நாளில் 250 ரன்கள் வரை எடுக்கலாம், ஆனால் நேற்று நாங்கள் ஆரம்பத்திலேயே முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றினோம்.

எங்கள் வேகப் பந்து வீச்சாளர்கள் முதல் 7-8 ஓவர்களில் அருமையாக செயல்பட்டனர். அவர்கள் சரியான இடங்களில் பந்தை வீசினர், மேலும் பிட்ச் அவர்களுக்கு உதவியது. அது எங்களுக்கு நல்ல தொடக்கத்தை அளித்தது.

சுப்மன் கில்சுப்மன் கில்

ஆடுகளத்தை கருத்தில் கொண்டு தொழில்முறையாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம். எனவே அதற்கு தகுந்தவாறு நாங்கள் பேட்டிங் செய்தோம். சூழ்நிலைக்கு தகுந்தவாறு தகவமைத்து அதற்கு ஏற்ப விளையாடுவது அவசியம்” என்று கூறி இருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article