RCB vs PBKS Final: அந்த அணி கோப்பை வெல்லவே அதிக வாய்ப்பு; உறுதியாகக் கூறும் ChatGPT, Grok, Gemini

6 months ago 8
ARTICLE AD BOX

ஐபிஎல் வரலாற்றில் 17 சீசன்களாகக் கோப்பையை வெல்லாத மூன்று அணிகளில் ஒரு அணி முதல்முறையாகக் கோப்பை ஏந்தப்போகிறது.

2014 பிறகு ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் பஞ்சாப்பும், 2016-க்குப் பிறகு ரஜத் பட்டிதார் தலைமையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கும் பெங்களூருவும் அகமதாபாத்தில் தங்களின் கோப்பை கனவை நிறைவேற்ற இன்று (ஜூன் 3) பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.

PBKS vs RCB - IPL 2025 FinalPBKS vs RCB - IPL 2025 Final

எந்த அணி கோப்பை வென்றாலும் அது எமோஷனல் மொமென்ட் என்பதால் ஆர்.சி.பி, பஞ்சாப் ரசிகர்களைக் கடந்து மற்ற ஐ.பி.எல் ரசிகர்கள் எந்த அணியை சப்போர்ட் செய்வதென்றறியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், எக்ஸ் க்ரோக் (X - Grok), ஜெமினி (Gemini), சாட்ஜிபிடி (ChatGPT) ஆகிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தளங்கள், இறுதிப்போட்டியில் எந்த அணி கோப்பை வெல்லும் என்று கணித்திருக்கின்றன.

X - Grok:

கிடைக்கின்ற தரவுகளின் அடிப்படையில் ஆர்.சி.பி வெல்ல சற்று கூடுதலான வாய்ப்பு இருக்கிறது.

ஜோஷ் ஹேசில்வுட் (11 போட்டிகளில் 21 விக்கெட்டுகள்), சுயாஷ் சர்மா தலைமையிலான ஆர்.சி.பி அணியின் பந்துவீச்சு அபாரமாக இருக்கிறது.

அதேபோல், விராட் கோலி (55.81 சராசரியில் 614 ரன்கள்), பில் சால்ட்டின் அபாரமான ஃபார்ம் என அவர்களின் பேட்டிங் சிறந்த நிலையில் உள்ளது.

RCBRCB

அகமதாபாத்தில் ஆர்.சி.பி அணி முதலில் பேட்டிங் செய்த 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்றிருக்கிறது.

மேலும், கடினமான சூழ்நிலைகளைக் கையாளும் திறன் அவர்களுக்கு கூடுதல் அட்வான்ட்டேஜ்.

டேவிட் வார்னர், ஷேன் வாட்சன் போன்றோர் ஆர்.சி.பி-யை ஆதரித்திருக்கின்றனர். இறுதிப்போட்டியில் ஹேசில்வுட்டை ஆட்ட நாயகனாக இருப்பார் என்று வார்னர் கணித்துள்ளார்.

ஸ்ரேயஸ் ஐயர்ஸ்ரேயஸ் ஐயர்

இருப்பினும், குவாலிஃபயர் 2-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 203 ரன்களை, ஸ்ரேயஸ் ஐயரின் 87 ரன்கள் நாட்அவுட் இன்னிங்ஸால் பஞ்சாப் சேஸ் செய்தது அவர்களின் மீண்டெழும் தன்மையை வெளிப்படுத்தியது.

கைல் ஜேமிசன், யுஸ்வேந்திர சஹல் அடங்கிய பவுலிங் யூனிட் அபாரமாக இருக்கிறது.

எனினும், ஆர்.சி.பி அணியின் தற்போதைய ஃபார்ம், சமநிலை மற்றும் வேகத்தைக் கருத்தில் கொண்டு, இறுதிப் போட்டியில் அவர்களே வெற்றி பெறுவார்கள் என்று நான் கணிக்கிறேன்.

பெரிய போட்டிகளில் ஆர்.சி.பி-யின் அனுபவம் அவர்களை சாம்பியன்களாக மாற்றும்.

RCB : 2009, 2011, 2016 பைனல்ஸில் செய்த தவறுகள் என்ன? சாதனை படைக்குமா RCB; பலம், பலவீனம் என்ன?

Gemini:

இந்த சீசனில் சமீபத்திய போட்டிகள், குவாலிஃபயர் 1 அடிப்படையில் ஆர்.சி.பி அணி சற்று முன்னிலை பெற்றிருக்கிறது.

ஆனாலும், பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களின் மீண்டெழும் திறனைக் காட்டியிருக்கிறது. எந்த அணிக்கும் சவாலளிக்கும் பேட்டிங் பவரைக் பஞ்சாப் கொண்டுள்ளது.

எனவே, இறுதிப்போட்டியில் அவரவர்களின் செயல்திறனைப் பொறுத்தே முடிவு அமையும்.

KohliKohli

மேலும், டாஸ், வானிலை போன்ற காரணிகளும் முடிவுகளில் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்.

இறுதிப்போட்டியில் யார் வெல்வார்கள் என்று சொல்வது கடினம். ஏனெனில், இரு அணிகளுமே தங்களின் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வலுவான காரணங்களைக் கொண்டிருக்கின்றன.

இருப்பினும், இரு அணிகளில் ஒன்றைத் தேர்வு செய்யும் கட்டாயம் ஏற்பட்டால் நான் கொஞ்சம் ஆர்.சி.பி பக்கம் செல்வேன்.

PBKS vs RCBPBKS vs RCB

ChatGPT:

ஆர்.சி.பி அணியின் ஃபார்ம், இந்த சீசனில் பஞ்சாப்புக்கெதிரான போட்டிகளில் பெற்ற வெற்றிகள், குறிப்பாக குவாலிஃபயர் 1-ல் அவர்களின் உறுதியான வெற்றி ஆகியவற்றால் இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி-யே என் முதல் விருப்பமாக இருக்கிறது.

இருப்பினும், பஞ்சாப்பின் சமீபத்திய செயல்திறன், ஸ்ரேயஸ் ஐயரின் கேப்டன்சி ஆகியவை குறிப்பிடத்தக்கவகையில் ஆர்.சி.பி-க்கு சவாலளிக்கும்.

RCB v PBKS: முதல் கோப்பை யாருக்கு? பஞ்சாப் - பெங்களூரு போட்டியில் என்ன நடக்கும்? | Long Read
Read Entire Article