ARTICLE AD BOX
'பெங்களூரு தோல்வி!'
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சின்னச்சாமி மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியை பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. போட்டிக்குப் பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் ரஹத் பட்டிதர் சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார்.
RCB'ரஜத் பட்டிதர் விளக்கம்!'
சின்னசாமி போட்டி குறித்து அவர் பேசியதாவது, ''பிட்ச் ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக இருந்தது. 'Two Pace' விக்கெட்டாக தெரிந்தது. ஆனாலும் நாங்கள் ரொம்பவே சுமாராகத்தான் பேட்டிங் செய்தோம். பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப்தான் ரொம்பவே முக்கியம். நாங்கள் அதில் கோட்டைவிட்டு விட்டோம்.
CSK : 'சிக்சர் அடிப்பதற்காக சிஎஸ்கே அழைத்து வரும் Ex மும்பை வீரர்!' - பின்னணி என்ன?குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டை இழந்துகொண்டே இருந்தோம். பார்ட்னர்ஷிப்கள் ரொம்பவே முக்கியம். இந்தப் போட்டியிலிருந்து அதைத்தான் படிப்பினையாக எடுத்து செல்ல விரும்புகிறேன். சூழலுக்கு ஏற்றவாறு அணியில் மாற்றங்களை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். பஞ்சாபின் பௌலர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
Rajat Patidarபிட்ச்சைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படாமல் நாங்கள் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். வெற்றிப் பெறுவதற்கு தேவையான ஸ்கோரை எடுக்க வேண்டும். இந்தப் போட்டியில் எங்கள் பேட்டிங்கில் இண்டண்ட் இருந்ததில் மகிழ்ச்சிதான். ஆனாலும் அடுத்தப் போட்டிக்குள் பேட்டிங்கில் இருக்கும் குறைகளை களைய வேண்டும்.' என்றார்.

8 months ago
8







English (US) ·