RCB: "இத்தனை ஆண்டுகள் தந்த ஏமாற்றங்களுக்கும் ஆறுதல் தரும்" - விராட் கோலி நெகிழ்ச்சி

6 months ago 8
ARTICLE AD BOX

2025-ம் ஆண்டின் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி அணி.

ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாகக் கோப்பையை வென்று தங்களுடைய 18 வருடக் கனவை நிறைவேற்றியிருக்கிறது பெங்களூரு அணி.

RCB vs PBKSRCB vs PBKS

18 ஆண்டுக் காலம் பெரும் உழைப்பைச் செலுத்தினாலும் ஐ.பி.எல் கோப்பைத் தங்களுடைய கைகளுக்கு எட்டவில்லை என்பது பெங்களூரு அணிக்குப் பெரும் ஏக்கமாகவே இருந்தது.

அந்த ஏக்கம் தீர்ந்து நேற்று போட்டி முடியும் தருணத்தில் இருக்கும்போதே ஆனந்தக் கண்ணீர் வடித்திருந்தார் கோலி.

கோப்பை வென்றது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் கோலி.

Virat Kohli : 'நான் இருந்திருந்தால் கோலியை விட்டிருக்கமாட்டேன்!' - ஆதங்கப்படும் ஸ்ரீகாந்த்

அந்தப் பதிவில் அவர், "இந்த அணிதான் கனவை நனவாக்கியது. இது நான் என்றும் மறக்க முடியாத ஒரு சீசன்.

கடந்த 2.5 மாதங்களாக இந்தப் பயணத்தை நாங்கள் முழுமையாக அனுபவித்தோம்.

இது ஆர்.சி.பி ரசிகர்களுக்காக, மிக மோசமான காலங்களில் கூட எங்களை விட்டு விலகாதவர்களுக்காக.

இது இத்தனை ஆண்டுகளாக உடைந்த இதயங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் ஆறுதல்.

ஐ.பி.எல் கோப்பையைப் பொறுத்தவரை, என் நண்பனே, உன்னை உயர்த்தி கொண்டாட 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்தாய்.

ஆனால், இத்தனை வருடக் காத்திருப்புக்கு இப்போது சரியான பலன் கிடைத்திருக்கிறது!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Virat Kohli : 'நாங்க 3 பேரும் உயிரைக் கொடுத்து ஆடியிருக்கோம்..' - நெகிழ்ந்த விராட் கோலி!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article