ARTICLE AD BOX
'குஜராத் வெற்றி!'
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
Rajat Patidarகுஜராத் சார்பில் பௌலிங்கில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பேட்டிங்கில் பட்லர் சிறப்பாக ஆடி 73 ரன்களை எடுத்திருந்தார். சிராஜூக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டிக்குப் பிறகு தோல்விக்கான காரணங்கள் குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர் பேசியிருந்தார்.
ரஜத் பட்டிதர் பேசியதாவது, 'நாங்கள் 200 ரன்களை எட்ட வேண்டும் என நினைக்கவில்லை. பவர்ப்ளே முடிந்தவுடன் 190 ரன்கள் எடுத்தால் போதும் என்றே நினைத்தோம். ஆரம்பத்தில் நாங்கள் நிறைய விக்கெட்டுகளை இழந்ததுதான் பிரச்சனையாகிவிட்டது. நாங்கள் துடிப்பாக ஆடிய விதம் சரிதான். ஆனாலும் பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இழந்திருக்கக்கூடாது.
RCBஎங்களின் பௌலர்களை பாராட்டியே ஆக வேண்டும் இந்த டார்கெட்டை வைத்து 18 ஓவர்கள் வரை போட்டியை இழுத்து சவாலளித்திருந்தார்கள். ஜித்தேஷ் சர்மா, லிவிங்ஸ்டன், டிம் டேவிட் ஆகியோர் பேட்டிங் ஆடிய விதமும் அற்புதமாக இருந்தது. எங்கள் அணியின் பேட்டிங் செறிவு எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையையே கொடுக்கிறது.' என்றார்.
RCB vs GT : இயல்புநிலைக்குத் திரும்பியதா RCB? ருத்ரதாண்டவம் ஆடிய பட்லர் - எப்படி வென்றது குஜராத்?
8 months ago
8







English (US) ·