RCB: "நான் பெங்களூரு அணியை தொடங்கியபோது..." - கோப்பையை வென்றது குறித்து விஜய் மல்லையா

6 months ago 8
ARTICLE AD BOX

2025-ம் ஆண்டின் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி அணி. ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையைத் தன் வசப்படுத்தியிருக்கிறது பெங்களூரு அணி.

RCBRCB

கோப்பையை வெல்வது ஆர்.சி.பி அணியினருக்கு கிட்டத்தட்ட 18 வருடக் கனவு. அந்தக் கனவு நனவான ஆனந்தத்தில் போட்டி முடிந்த பிறகு கோலி உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஆர்.சி.பி அணியின் உரிமையாளரான விஜய் மல்லையா பெங்களூரு அணியை வாழ்த்தி பதிவிட்டிருக்கிறார்.

அவர், "நான் ஆர்சிபியைத் தொடங்கியபோது, ஐ.பி.எல் கோப்பை பெங்களூருக்கு வரவேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இளம் வீரராக இருந்த கிங் கோலியைத் தேர்ந்தெடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

மேலும், அவர் 18 ஆண்டுகளாக ஆர்சிபியுடன் இருந்து வந்திருக்கிறார். யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில் மற்றும் மிஸ்டர் 360 ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் கௌரவமும் எனக்குக் கிடைத்தது.

RCB : '10 வருசத்துல 4 ஐ.பி.எல் கப் ஜெயிச்சிட்டேன்' - ஆட்டநாயகன் க்ரூணால் பாண்ட்யா
விஜய் மல்லையாவிஜய் மல்லையா

அவர்கள் ஆர்சிபி வரலாற்றில் அழியாத பகுதியாக உள்ளனர். இறுதியாக, ஐ.பி.எல் கோப்பை பெங்களூருக்கு வந்துவிட்டது.

எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும். ஆர்சிபி ரசிகர்கள் மிகச் சிறந்தவர்கள்; அவர்கள் ஐ.பி.எல் கோப்பையைத் தகுதியுடன் பெறுகிறார்கள். ஈ சாலா கப் பெங்களூரு வருதே!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Read Entire Article