RCB : ''பஞ்சாபை வீழ்த்த இப்படித்தான் திட்டமிட்டோம்!'' - புவனேஷ்வர் குமார்

6 months ago 7
ARTICLE AD BOX

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது.

ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது.

Bhuvaneshwar Kumar - RCB vs PBKSBhuvaneshwar Kumar - RCB vs PBKS

கேம் சேஞ்சிங் ஓவர்

போட்டிக்குப் பிறகு புவனேஷ்வர் குமார் பேசுகையில், "பிட்ச் அவ்வளவு சுலபமாக இல்லை என்பது எங்களுக்கு தெரியும்.

அதனால் 180 ரன்களை எடுத்தாலே போதும் என நினைத்தோம். நாங்கள் நினைத்ததை விட 10 ரன்கள் அதிகமாகத்தான் எடுத்தோம்.

க்ரூணால் பாண்ட்யாதான் கேம் சேஞ்சிங் ஓவரை வீசினார். பந்தின் வேகத்தை மாற்றி மாற்றி வீச வேண்டும். ஸ்லோயர் ஒன்களை வீச வேண்டும் என்பது எங்களின் திட்டம்தான்.

ஆனால், அதை ஓவராக செய்துவிடக்கூடாது என்றும் நினைத்தோம். மற்ற வேரியேஷன்களோடு சேர்த்தே அதையும் வீச நினைத்தோம்!" என்றார்.

Read Entire Article