ARTICLE AD BOX
ஐபிஎல் இன்றைய (ஏப்ரல் 13) போட்டியில் ராஜஸ்தான், பெங்களூர் ஆகிய அணிகள் ஜெய்ப்பூரில் மோதின. இப்போட்டியில், பெங்களூர் அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தானில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 75 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து 17-வது ஓவரிலேயே இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. பெங்களுருவில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 65 ரன்கள் குவித்தார்.
பிலிப் சால்ட்போட்டிக்குப் பின்னர் தோல்வி குறித்து பேசிய பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார், "பந்துவீச்சாளர்கள் தங்களின் திட்டத்தை செயல்படுத்தியது பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது.
பவர்பிளேயில் எங்களின் ஸ்பெஷலே பவுலிங்தான். நிச்சயமாக இந்த விக்கெட் பேட்டிங்குக்கு மிகவும் சாதகமாக இல்லை. நாங்கள் 150-லிருந்து 170-க்குள் அவர்களைக் கட்டுப்படுத்த விரும்பினோம்.
அந்த நம்பிக்கை எங்களது பவுலர்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்தது. அவர்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
எங்கள் பவுலர்கள் எந்தப் பிட்ச்சிலும் எந்த சமயத்திலும் தங்களின் திறமையை வெளிப்படுத்தத் தயாராக உள்ளனர். அவர்களே எங்களுக்கு நம்பிக்கை கொண்டு வருகின்றனர்.
யஷ் தயாள்ஃபிலிப் சால்ட் மிகவும் நன்றாக விளையாடினார். அவரின் ஆட்டத்தை டக் அவுட்டில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது.
ஃபிலிப் சால்ட் அதிரடியாக விளையாடிய விதமும், விராட் கோலி மறுமுனையிலிருந்து ஸ்ட்ரைக்கை மாற்றிக்கொண்டே இருந்ததும் மிகவும் ஸ்பெஷலாக அமைந்தது.
நாங்கள் எப்பொழுதும் ஒரு சிறந்த பாசிட்டிவான கிரிக்கெட்டை விளையாட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்.
CSK : 'கே.எல் ராகுலுக்கு பதில்தான் திரிபாதி'- ஏலத்தில் சிஎஸ்கே தவறவிட்ட வீரர்கள் யார் யார் தெரியுமா?
8 months ago
8







English (US) ·