RCB : 'பெங்களூரு பொண்ணதான் கட்டியிருக்கேன்; அதனால RCBக்கு தான் சப்போர்ட்!' - ரிஷி சுனக்

6 months ago 7
ARTICLE AD BOX

18-வது ஐ.பி.எல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றன.

இன்று(ஜூன் 3) குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகள் மோதுகின்றன.

RCB vs PBKS - IPL 2025 FINALRCB vs PBKS - IPL 2025 FINAL

இரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாததால், எந்த அணி வெற்றி பெறும் என கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று பல முன்னாள் வீரர்களும், பல்வேறு பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து முன்னாள் பிரதமரான ரிஷி சுனக்கும் பெங்களூரு அணிக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். இறுதிப்போட்டியை நேரில் காண அகமதாபாத் மைதானத்திற்கு ரிஷி சுனக் வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ரிஷி சுனக், ஆர்சிபிரிஷி சுனக், ஆர்சிபி

"நான் பெங்களூரு பெண்ணை திருமணம் செய்துள்ளேன். எனவே ஆர்சிபி எனது அணி" என்று உற்சாகமான பேட்டி ஒன்றையும் கொடுத்திருக்கிறார்.

Read Entire Article