ARTICLE AD BOX
18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் சிஎஸ்கே-வை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரசிகர்கள் குறித்து பேசிய அஷ்வின், "கடந்த ஆண்டு நான் தினேஷ் கார்த்திக்குடன் 'குட்டி ஸ்டோரி' என்ற நிகழ்ச்சியில் பேசினேன்.
RCB ரசிகர்கள்அப்போது அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரசிகர்களைப் பற்றி சொன்னார். ஆர்சிபி ரசிகர்கள் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் தங்கள் வீரர்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்று அவர் சொன்னார். எனவே, ரசிகர்கள் செய்யும் விமர்சனம் உண்மையானதாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு வீரரும் தவறு செய்ய வேண்டும் என்பதற்காக ஆடுகளத்துக்கு செல்வதில்லை.
நீங்கள் ஆக்கபூர்வமான விமர்சனத்தை சொல்லலாம், கேலியும் செய்யலாம். அதே சமயம் ரசிகர்கள் தங்கள் வீரர்களை கைவிட்டு விடக்கூடாது. அவர்கள்தான் உண்மையான ரசிகர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
``பிரித்வி ஷாவைப் பாருங்கள்; கிரிக்கெட் உங்களை அழவைக்கும்" - ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் வீரர்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

8 months ago
8







English (US) ·