"RCB வென்றால் பொது விடுமுறை அளிக்க வேண்டும்" - கர்நாடக முதல்வருக்குக் கடிதம் எழுதிய ரசிகர்!

6 months ago 8
ARTICLE AD BOX

ஆர்.சி.பி அணியின் தீவிர ரசிகர் ஒருவர், வருகின்ற ஜூன் 3ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டியில் RCB வெற்றிபெற்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனக் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதிய விசித்திர நிகழ்வு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தக் கடிதத்தை எழுதிய ரசிகர் பெலகாவி பகுதியில் வசிக்கும் சிவானந்த் மல்லன்னவர் எனத் தெரியவந்துள்ளது.

RCB Fan LetterRCB Fan Letter

கர்நாடக மாநில நாளைக் கொண்டாடுவது போல, இந்தத் தினத்தை RCB Fans Festival என மாநிலம் முழுவதும் கொண்டாட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

Simbu: `நீங்கள் யார்-னு கேட்டுட்டாரு; அதை மறக்கவே முடியாது' - கோலி பற்றி சுவரஸ்யம் பகிர்ந்த சிம்பு

அத்துடன், மாவட்டம்தோறும் முறையாக விழாக்களை ஏற்பாடு செய்யவும் கோரியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒருவேளை வெற்றிபெற்றால் அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளார் சிவானந்த்.

RCBRCB

கடந்த மே 29ம் தேதி நடைபெற்ற ஆர்.சி.பி - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 1 போட்டியில், மிகப் பெரிய வெற்றியைச் சாத்தியமாக்கியதற்குப் பிறகு பெங்களூரூ ரசிகர்கள் தங்கள் அணி மீது கூடுதல் நம்பிக்கைக் கொண்டிருக்கின்றனர்.

Virat Kohli: `என் மகனை உருவாக்கியது அவர் தான்’ - யஷ் தயாளின் தந்தை நெகிழ்ச்சி

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article