Revolver Rita: ``கடைசியில ராதிகா மேம் வந்து ஸ்கோர் பண்ணிட்டு போயிடுவாங்க'' - கீர்த்தி சுரேஷ்

1 month ago 2
ARTICLE AD BOX

ஜே.கே சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள டார்க் காமெடி படம் 'ரிவால்வர் ரீட்டா'.

ராதிகா சரத்குமார் அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

ரிவால்வர் ரீட்டா படத்தில்... கீர்த்தி சுரேஷ்ரிவால்வர் ரீட்டா படத்தில்... கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (நவ. 26) சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பேசிய கீர்த்தி சுரேஷ், " இயக்குநர் சந்துரு சாரின் விஷன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது.

அவர் என் கிட்ட முதல் தடவைக் கதை சொல்லும்போதே நான் அவ்வளவு சிரிச்சேன்.

ரொம்ப நாள் கழிச்சு ஒரு கதைக்கேட்கும்போது சிரிச்சிருக்கேன். அதனால இந்தப் படத்துக்கு உடனே ஓகே சொல்லிட்டேன்.

படப்பிடிப்புல ஒரு ஆர்டிஸ்ட்டை ரொம்ப கம்ஃபர்டபிளா நடந்துவாரு. நான் அவர் கோபப்பட்டு பார்த்ததே இல்ல. அவ்வளவு அன்பானவர்.

சந்துரு இன்னும் நிறைய படங்கள் பண்ணணும். ரீட்டாவா என்னை தேர்வு செஞ்சதுக்கு ரொம்ப நன்றி.

ராதிகா மேம் கூட முதல் முறையா வொர்க் பண்றேன். ஆனா நான் ராதிகா மேம் ஓட புரொடக்ஷன்ல 'இது என்ன மாயம்' படம் மூலமா தான் அறிமுகமானேன்.

ரிவால்வர் ரீட்டா படத்தில்... ரிவால்வர் ரீட்டா படத்தில்...

செட்டில மேம் ரொம்ப பயங்கரமா நடிப்பாங்க. அவுங்களை மாதிரி ஒரு சீனியர்ஸ் கூட வொர்க் பண்ணது ரொம்ப சந்தோஷம்.

எங்களுடைய கெமிஸ்ட்ரி படத்துல ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு இந்தப் படத்துல ஒரு சீன் இருக்கும்.

எனக்கு படத்துலயே ரொம்ப புடிச்ச சீன் அதுதான். அது ஒரு காமெடி சீன். அதுல கடைசியில வந்து ராதிகா மேம் தான் ஸ்கோர் பண்ணிட்டு போயிடுவாங்க" என்று கூறியிருக்கிறார்.

BB Tamil 9: "நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல" - காட்டமான அமித்; கண்ணீர்விடும் வியானா
Read Entire Article