Rinku Singh: நாட்டின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரை மணக்கும் ரிங்கு சிங் - யார் அந்த ப்ரியா சரோஜ்?

6 months ago 8
ARTICLE AD BOX

ஐ.பி.எல்லில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் ரிங்கு சிங், தன்னுடைய அதிரடி பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.

இந்திய டி20 அணியில் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். இதனிடையே ரிங்கு சிங்கும், வழக்கறிஞரும், எம்பியுமான ப்ரியா சரோஜ்ஜூம் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ரிங்கு சிங் - ப்ரியா ப்ரியா சரோஜ்ரிங்கு சிங் - ப்ரியா ப்ரியா சரோஜ்

இந்நிலையில் இருவருக்கும் வரும் ஜூன் 8 ஆம் தேதி லக்னோவில் உள்ள தனியார் ஓட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும், நவம்பர் 18ஆம் தேதி வாரணாசியில் ரிங்கு சிங் மற்றும் ப்ரியா சரோஜின் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

யார் இந்த ப்ரியா சரோஜ்?

உத்தரபிரதேச மாநிலத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான துஃபானி சரோஜினியின் மகள் தான் ப்ரியா சரோஜ். பல வருடங்களாக சமாஜ்வாடி கட்சியிலிருந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார் ப்ரியா சரோஜ்.

 ப்ரியா ப்ரியா சரோஜ் ப்ரியா ப்ரியா சரோஜ்

கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், மச்சிலிஷர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றி இருக்கிறார்" என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article