Rishabh Pant: ``20 முறை அவுட்டாகப் பார்த்தார்'' - துணிச்சலான பேட்டிங் ஸ்டைல் குறித்து ஏபிடி ஓபன்!

6 months ago 8
ARTICLE AD BOX

நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தன்னைச் சிறந்த பேட்ஸ்மேனாக நிலை நிறுத்தியுள்ளார் இந்தியாவின் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டி போல அதிரடியாக விளையாடும் பண்டின் பேட்டிங் ஸ்டைல் கிரிக்கெட் வட்டாரத்தில் எப்போதும் பேச்சுபொருளாக இருக்கும்.

pantpant

இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ்.

மைதானத்தில் பிரிட்டிஷ் ரசிகர்களையும் கூட உற்சாகப்படுத்தும் பண்டின் அச்சமற்ற அணுகுமுறைதான் அவரது வெற்றிக்கு வழிவகுக்கிறது என்பதையும் ஏபிடி ஒப்புக்கொண்டுள்ளார்.

"பண்ட் அதீத ரிஸ்க் எடுத்து விளையாடுகிறார். இது சில நேரங்களில் உங்களை மிகவும் எரிச்சலடையச் செய்யும். இரண்டு இன்னிங்ஸிலும் அவர் 30 ரன்களுக்கு உள்ளாகவே அவுட் ஆகியிருக்கக் கூடிய 20 இடங்களை என்னால் கணிக்க முடிந்தது. ஆனால் அவர் அவுட் ஆகவில்லை, அதுதான் முக்கியம்!

Rishabh Pant : 'அவுட் வேணாம்; நீ விளையாடு நண்பா' பெருந்தன்மை காட்டிய பண்ட்' - என்ன நடந்தது?

அவர் எதிரணியை நேருக்கு நேராக எதிர்கொள்கிறார். இப்படி விளையாடுபவர்கள் 100-க்கு 99 முறை வெற்றிகரமான வீரர்களாக இருப்பார்கள்" எனத் தனது யூடியூப் சானலில் பேசியுள்ளார் டிவில்லியர்ஸ்.

மேலும் டிவில்லியர்ஸ், "பண்ட் ஆட்டநாயகன் விருதுக்குத் தகுதியானவர். ஆனால் இந்தியா வெற்றிபெறாதது ஒரு அவமானம்" என்று கூறியுள்ளார்.

AB de VilliersAB de Villiers

அத்துடன் இந்திய அணியில் மாற்றம் வேண்டும் என மீடியாக்களில் எழுதப்படுவது குறித்து, "இந்தியா பதட்டப்படுவதற்கான நேரம் வந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை, இது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் சீரிஸ்" எனக் கூறியுள்ளார்.

அடுத்த போட்டிகளிலும் பண்டின் பல்டிகளைப் பார்ப்போம் என நம்பிக்கைக்கொள்வோம்!

Bumrah: `கூகுளில் தேடிப்பாருங்கள்’ - பேட்டிங் குறித்த கேள்விக்கு கெத்தாக பதில் சொன்ன பும்ரா

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article