ARTICLE AD BOX
இன்று துபாயில் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் ரிஷப் பன்ட், இரண்டாண்டுகளுக்கு முன்பு உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 2022 டிசம்பர் 30-ம் தேதி கார் ஒன்று டெல்லி டு டேராடூன் சாலையில் சாலைத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி பற்றி எரிந்து கொண்டிருந்தது. விபத்து நடந்து பகுதியிலிருந்த தொழிற்சாலையில் வேலைபார்க்கும் இரண்டு இளைஞர்கள் காருக்கருகில் வந்து பார்த்தபோது, பன்ட் கடுமையான காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்தார்.
அந்த இளைஞர்கள், பன்ட்டை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதையடுத்து, உயிர் பிழைத்த பன்ட்டால் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் கிரிக்கெட்டே விளையாட முடியாமல் போனது. 2011-க்குப் பிறகு 12 ஆண்டுகள் கழித்து சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட முடியவில்லை. பிறகு, 2024-ல் ஐ.பி.எல் மூலம் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து, டி20 உலகக் கோப்பையில் களமிறங்கி இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல தன்னுடைய பங்களிப்பையும் செலுத்தினார். பின்னர், தனக்கு பிடித்த ஃபார்மெட்டான டெஸ்டில் 629 நாள்களுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் வங்காளதேசத்துக்கெதிராகக் களமிறங்கி பில்லா அஜித் போல `I'm Back' என சதமடித்துக் காட்டினார். இப்போது, துபாயில் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் இருக்கிறார்.
ரிஷப் பன்ட்இந்த நிலையில், உலக அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, சிறந்த விளையாட்டு அணிகளுக்கு வழங்கப்படும் லாரஸ் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் விருதுகளில், `2025-ம் ஆண்டுக்கான வேர்ல்டு கம்பேக் ஆஃப் தி இயர் (Laureus World Comeback Of The Year 2025)' விருதுக்கு பன்ட் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார். விபத்தின்போது அவ்வளவுதான் உலகில் தனது நாள்கள் முடிந்துவிட்டது என்று நினைத்த பன்ட் இன்று வேர்ல்டு கம்பேக் ஆஃப் தி இயர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார். லாரஸ் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் விருது வழங்கும் விழா ஏப்ரல் 21-ம் தேதி மாட்ரிட்டில் நடைபெறவிருக்கிறது.
விருதுக்கு நாமினேட் ஆனது குறித்து பேசிய பன்ட், ``கார் விபத்திலிருந்து உயிர்பிழைத்தபோது நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று உணர்ந்தேன். அதுதான் என்னை மேலும் கடினமாக உழைக்கத் தூண்டியது. நான் மீண்டு வந்து இயல்பு வாழ்க்கைத் திரும்பியது எனது கம்பேக்கின் பாதி வட்டம்தான் என்று எனக்குத் தெரியும். அதனை முழுமையாக்க, இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற என் கனவை நோக்கி என்னை அர்ப்பணித்தேன். கார் விபத்துக்குள்ளான 629 நாட்களுக்குப் பிறகு நான் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடினேன். அதற்கு முன் டி20 உலகக் கோப்பையை நாங்கள் வென்றோம்.
ரிஷப் பன்ட்லாரஸ் வேர்ல்ட் காம்பேக் ஆஃப் தி இயர்
லாரஸ் வேர்ல்ட் காம்பேக் ஆஃப் தி இயர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது, எனது கம்பேக்குக்கு உதவிய எனது குடும்பம், பி.சி.சி.ஐ, மருத்துவர்கள், மருத்துவக் குழு, துணைப் பணியாளர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் என அனைவரின் முயற்சிகளுக்கான அங்கீகாரம். விளையாட்டின் சிறந்த கம்பேக்குகளின் சின்னம் இந்த விருது. இதற்கு என்னை நாமினேட் செய்ததை மதிப்புமிக்கதாகப் பார்க்கிறேன்." என்று கூறியிருக்கிறார்.
சச்சின் வேர்ல்டு கம்பேக் ஆஃப் தி இயர் விருதை பன்ட் வெல்லும் பட்சத்தில், கிரிக்கெட் வரலாற்றில் இந்த விருதை வென்ற முதல் நபர் என்ற புதிய வரலாற்றைப் பன்ட் படைப்பார். மேலும், இந்த ஆண்டுக்கான லாரஸ் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் விருதுகள் ஒட்டுமொத்த பிரிவுகளிலும் தேர்வு செய்யப்பட்ட ஒரே கிரிக்கெட் வீரர் பன்ட் மட்டும்தான். முன்னதாக, 2011 உலகக் கோப்பை வெற்றித் தருணத்துக்காக 2020-ல் லாரஸ் ஸ்போர்ட்டிங் மொமென்ட் விருதை பெற்று, வரலாற்றில் லாரஸ் விருது வென்ற ஒரே இந்தியராக சச்சின் டெண்டுல்கர் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs AUS: ``ஆஸ்திரேலியா மிகச்சிறந்த எதிரணி ஆனால்..." - அரையிறுதி பற்றி ரோஹித் சொல்வதென்ன?Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
9







English (US) ·