Rishabh Pant: ``பண்ட்டின் கேப்டன்சி highly underrated'' - கடைசி ஓவர் பிளானை விளக்கும் கைஃப்

8 months ago 8
ARTICLE AD BOX

ராஜஸ்தான் அணிக்கெதிராக லக்னோ அணி நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) விளையாடிய போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, மொத்தமாக 180 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 19 ஓவர்களில் 172 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. க்ரீஸில் ஹெட்மயரும், துருவ் ஜோரலும் இருந்தனர்.

ஆவேஷ் கான் - ரிஷப் பண்ட்ஆவேஷ் கான் - ரிஷப் பண்ட்

அந்த நேரத்தில் கடைசி ஓவரை வீசிய ஆவேஷ் கான், ஒரு பவுண்டரி கூட விட்டுக்கொடுக்காமல், ஹெட்மயரின் விக்கெட்டையும் எடுத்து, வெறும் 6 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து லக்னோவை வெற்றிபெறச் செய்தார். இதன் மூலம் லக்னோ அணி, 8 போட்டிகளில் தனது 5-வது வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த நிலையில், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் கேப்டன்சி குறித்தும், ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி ஓவரில் நடந்தவை குறித்தும் இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசியிருக்கிறார்.

எக்ஸ் தளத்தில், பண்ட் கேப்டன்சி highly underrated என்று பதிவிட்டிருக்கும் வீடியோவில் பேசியிருக்கும் கைஃப், "கடைசி ஓவர் இரவு 11:07 மணிக்குத் தொடங்கி 10 நிமிடங்கள் நீடித்தது. வேண்டுமென்றே நேரத்தை தாமதப்படுத்தும் தந்திரங்கள் நடந்தது. பண்ட் தனக்கான நேரத்தை எடுத்துக் கொண்டார். பந்து மாற்றப்பட்டது, ஒரு முறை ஆவேஷ் கான் ஓடிவரும்போது நிறுத்தப்பட்டார். வேண்டுமென்றே பேட்ஸ்மேன்களை க்ரீஸில் காக்க வைத்தனர். இவ்வாறு நடப்பது முதல்முறையல்ல. 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட, க்ளாசெனும், மில்லரும் க்ரீஸில் இருந்தபோது, பண்ட் தரையில் படுத்துக்கொண்டு பிசியோக்களை (physios) அழைத்தார்.

Rishabh pant’s captaincy is highly underrated! pic.twitter.com/cl541IWfiG

— Mohammad Kaif (@MohammadKaif) April 19, 2025

இந்த இரண்டும் ஒன்றுதான். இதுபோன்ற போட்டிகள்தான் நம் ஆளுமையை வளர்க்கின்றன. இது ஒரு அற்புதமான வெற்றி. ஒரு அணியாக அடுத்த கட்டத்துக்கு இது கொண்டுசெல்லும். மேலும், இத்தகைய போட்டிகள், வீரர்கள் மற்றும் அணியின் குணத்தை நேர்மறையாக வளர்க்கும். சரியான நேரத்தில் ஆட்டத்தை இழுத்துப் பிடித்த பந்துவீச்சாளர்களுக்கே எல்லாப் பெருமைகளும். அது அவ்வளவு எளிதல்ல. 3 ஓவர்களை ஆவேஷ் கான் அற்புதமாக வீசினார்" என்று கூறினார்.

Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article