Rishabh Pant: ``ரிஷப் பண்ட்டை அப்படிச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை'' - LSG சஞ்சீவ் கோயங்கா

8 months ago 8
ARTICLE AD BOX

ஐபிஎல் நடப்பு தொடரில் நேற்று (ஏப்ரல் 4) நடைபெற்ற லக்னோ vs மும்பை போட்டியில் கடைசிநேர திருப்பங்களால் லக்னோ த்ரில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, மிட்செல் மார்ஷ், ஏய்டன் மார்க்ரம் ஆகியோரின் அதிரடி அரைசதங்கள் நடுவில் ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர் ஆகியோரின் அதிரடி கேமியோ ஆகியவற்றால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரிஷப் பண்ட் - ஹர்திக் பாண்டியா

அதையடுத்து, 204 என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில், ஒப்பனர்கள் வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கல்டன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தபோதும், அவர்களுக்கு அடுத்து வந்த நமன் திர் (43 ரன்களில் அவுட்), சூர்யகுமார் யாதவ் (67 ரன்களில் அவுட்) ஆகியோர் அணியின் வெற்றிவாய்ப்பை தக்கவைத்தனர். 18 ஓவர்கள் முடிவில் மும்பை அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட சூழலில் திலக் வர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் களத்தில் நின்றுகொண்டிருந்தனர்.

Chepauk : 'களத்தில் தோனி; பெருமிதத்தோடு பெற்றோர்!' - Exclusive Photo Album

அந்த சமயத்தில், தனது அணிக்கே சர்ப்ரைஸ் தந்தது மும்பை. அதாவது, 19 ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் 5 ரன்கள் வரவே, கடைசி பந்தில் ஸ்ட்ரைக்கிலிருந்த திலக் வர்மாவை ரிட்டயர்டு அவுட் முறையில் அழைத்துக்கொண்டது மும்பை அணி. பின்னர், கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்படவே, மும்பை வெறும் 9 ரன்கள் மட்டுமே அடித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டி உள்பட மொத்தமாக 4 போட்டிகளில் 19 ரன்கள் மட்டுமே அடித்திருக்கும் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட், இப்போட்டியில் தோற்றால் கடும் விமர்சனங்களை எதிர்கொள்வார் என்ற சூழலில் கடைசி நேரத்தில் பவுலர்களை சரியாகப் பயன்படுத்தி அணியை வெற்றிபெற வைத்தார். இவ்வாறிருக்க, லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ரிஷப் பண்ட்டை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

Sanjiv GoenkaSanjiv Goenka

சமீபத்திய உரையாடலில் சஞ்சீவ் கோயங்கா, "ரிஷப் பண்ட் தக்கவைக்கப்படவில்லை (மெகா ஏலத்துக்கு முன்பாக டெல்லி அணி) என்று தெரியவந்த தருணத்தில், அவரைச் சுற்றி அணியைக் கட்டமைக்கத் திட்டமிட்டோம். அவர் மிகச் சிறந்த கேப்டன் என்று நம்புகிறேன். அதை, மீண்டும் கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவரின் சிறந்த தலைமைப் பண்பு இன்னும் வெளிவரவில்லை. ரூ. 27 கோடிக்கு நங்கள் அவரைப் பெற்றதில் 27 வெறும் நம்பர்தான். அது 28-ஆக இருந்தாலும் வெறும் நம்பராகத்தான் இருக்கும். எங்கள் அணி சற்று வித்தியாசமானது. வலுவான நோக்கத்துடன் கேப்டனைச் சுற்றி அணி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வீரரும் வெற்றி பெறவேண்டும் என்ற தீவிரத்துடன் இருக்கின்றனர்" என்று கூறினார்.

Dhoni: `சேப்பாக்கத்தில் முதல் முறையாக தோனியின் பெற்றோர்!' - முக்கிய முடிவை அறிவிக்கிறாரா தோனி?
Read Entire Article