Rohit Sharma: "அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றே தெரியவில்லை" - ரோஹித் பற்றி கங்குலி ஆதங்கம்

9 months ago 8
ARTICLE AD BOX

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இன்றைய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 24 ஆண்டுகளுக்கு முந்தைய தோல்விக்குப் பதிலடி தருவதற்குத் தயாராக இருக்கிறது. அதேநேரத்தில், இந்தப் போட்டியோடு ரோஹித் ஓய்வை அறிவிக்கப்பபோவதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.

Rohit Sharma : ஓய்வு பெறுகிறாரா ரோஹித் சர்மா? - பிசிசிஐயின் திட்டம் என்ன?
ரோஹித் சர்மாரோஹித் சர்மா

இதற்கிடையில், இந்திய அணியின் தற்போதைய துணைக் கேப்டன் கில், இறுதிப்போட்டி முடிந்த பிறகுதான் ஓய்வைப் பற்றியெல்லாம் ரோஹித் யோசிப்பார் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில், எதற்காக ரோஹித் ஒய்வு பற்றி இப்போது பேச்சு என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து பேசுகையில் கங்குலி, ``ரோஹித் சர்மாவின் ஒய்வு பற்றி ஏன் பேசப்படுகிறது... எதற்காக இப்படி ஒரு கேள்வி. சில மாதங்களுக்கு முன்புதான் உலகக் கோப்பையை அவர் வென்றிருந்தார். அணித் தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர் நன்றாகத்தான் விளையாடுகிறார். நியூசிலாந்து அணியை விடவும் இந்திய அணி சிறப்பாக இருக்கிறது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடியது. அதைத்தொடர்ந்து, 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது.

சவுரவ் கங்குலிசவுரவ் கங்குலி

இப்போது, சாம்பியன்ஸ் டிராபியில் தோல்வியைச் சந்திக்காத அணியாக இருக்கிறது. இந்தியா நல்ல ஃபார்மில் உள்ளது. கோலி, கில், ஸ்ரேயாஸ், ரோஹித், கே.எல். ராகுல் என அனைவரும் நல்ல பார்மில் இருக்கின்றனர். இந்தியாவின் பந்துவீச்சு வரிசை நன்றாக இருக்கிறது. நிச்சயம் பைனல் நல்ல போட்டியாக இருக்கும். யார் வேண்டுமானாலும் வெல்லலாம், யார் வேண்டுமானாலும் தோற்கலாம்." என்று கூறினார்.

பிசிசிஐ தலைவராக கங்குலி இருந்தபோதுதான், இந்திய அணியின் ஒயிட் பால் கேப்டன்சி கோலியிடமிருந்து ரோஹித் வசம் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Rohit Sharma : ஓய்வு பெறுகிறாரா ரோஹித் சர்மா? - பிசிசிஐயின் திட்டம் என்ன?
Read Entire Article