ARTICLE AD BOX
ஜூன் 29, 2024-ல் இந்திய கிரிக்கெட் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த விறுவிறுப்பான போட்டியில் இந்தியா வெறும் 7 ரன்கள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றது.
போட்டி கையை விட்டு சென்றுவிடும் சூழலில் பும்ராவும், ஹர்திக் பாண்டியாவும் வீசிய இறுதி ஓவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத்தந்தன.
T20 World Cup India Victory Paradeஇந்த வெற்றி கிடைத்த ஓராண்டு நிறைவை கொண்டாடும் சூழலில், தென்னாப்பிரிக்காவை சந்திக்கும் இறுதிப்போட்டிக்கு முந்தைய இரவு படபடப்பாக இருந்தது குறித்து நினைவுகூர்ந்திருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.
ஒரு நாள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த 8 மாதங்களில் மீண்டும் ஒரு இறுதிப்போட்டியில் அணியை வழிநடத்தினார் ரோஹித் சர்மா. தொடர் முழுவதும் 257 ரன்கள் சேர்த்த அவர் இறுதிப்போட்டியில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் விராட் கோலியின் 79 ரன்கள் தென்னாப்பிரிக்காவுக்கு 177 என்ற சற்று கடினமான இலக்கை நிர்ணயிக்க உதவியது. க்ளாசனின் அதிரடி பீதியைக் கிளப்பினாலும் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் பாண்டியாவின் போராட்டம் போட்டியை இந்திய அணியின் பக்கம் இழுத்துவந்தது. கடைசி ஓவரில் டேவிட் மில்லரை வெளியனுப்பிய சூர்ய குமார் யாதவின் கேட்சை யார்தான் மறக்க முடியும்?
Rohit Sharma கூறியது என்ன?
"கடைசியாக 2007-ம் ஆண்டு நான் உலகக் கோப்பையை வென்றேன். என்னைப் பொருத்தவரை உலகக் கோப்பையை வெல்வதை விட பெரிய விஷயம் எதுவுமில்லை. அன்றைய இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. என் கால்கள் தரையில் இருப்பதை உணர முடியாத அளவு பதட்டமாக இருந்தேன்." என நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் ரோஹித்.
surya kumar yadhavசூர்யா பிடித்த கேட்ச்!
மேலும் அவர், "சூர்யா லாங் ஆஃபில் அந்த கேட்சைப் பிடித்ததுதான், இந்த போட்டிக்கான தருணம்." எனக் கூறியுள்ளார். "நான் லாங் ஆனில் இருந்தேன். சூர்யா பறந்துவரும் வரை அது சிக்ஸ் என்றுதான் நினைத்தேன். நடுவர்கள் எல்லையை சோதனை செய்தபோது எல்லோருமே பதட்டமாக இருந்தோம். சூர்யாவிடம் கேட்டபோது, 'பிடித்துவிட்டேன் என்றே நினைக்கிறேன்' என்று பதில் கூறினார். ஆனால் பெரிய திரையில் தோன்றும் வரை நடுவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று கூற முடியாது." என தனது மனநிலையை விளக்கியிருக்கிறார்.
Virat Kohli: `30 சதங்கள், வெற்றிகரமான கேப்டன்சி' - டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் சாதித்தது என்ன?
6 months ago
7







English (US) ·