ARTICLE AD BOX
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர். இந்திய அணி நிர்வாகம் அதன் கேப்டனை புள்ளி விவரங்களை வைத்து மதிப்பிடாது என்றும் அவரது ஆக்ரோஷமான அணுகுமுறையின் தாக்கத்தை வைத்தே மதிப்பிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. போட்டிக்குப் பிறகு கம்பீரிடம், கேப்டன் ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
ரோஹித் சர்மா தொடக்கத்தில் அச்சமில்லாமல் பந்துகளை எதிர்கொள்வது ஆடை மாற்றும் அறையில் உள்ள வீரர்களுக்கு ஒரு உறுதியளிப்பதாக கம்பீர் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியின் மூன்று போட்டிகளில் 84 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார் ரோஹித் சர்மா. அவர் பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் இந்தியாவின் பேட்டிங் தொனியை வடிவமைக்கும் நபராக இருக்கிறார்.
கம்பீர் பதில்
"சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டி நெருங்குகிறது. அதற்குமுன் நான் என்ன கூற முடியும். அணியின் கேப்டன் அந்த வேகத்தில் விளையாடுவது, நாம் பயமில்லாமல் தைரியமாக விளையாட வேண்டும் என்ற சிக்னலை ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு அனுப்புகிறது. நீங்கள் ரன்களை வைத்து மதிப்பிடுகிறீர்கள், நாங்கள் அவர் ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்து மதிப்பிடுகிறோம். இதுதான் வித்தியாசம்" என்றார் கம்பீர்.
Rohit Sharma with Virat Kohliமேலும், "நீங்கள் புள்ளிவிவரங்களை வைத்து மதிப்பிடுகிறீர்கள். பத்திரிகையாளர்களும் நிபுணர்களும் எண்களையும் சராசரிகளையும் பார்க்கின்றனர். ஒரு கோச்சாக, அணியாக நாங்கள் எண்களையும் சராசரிகளையும் பார்ப்பதில்லை. " என்றும் கூறியுள்ளார்.
Asia Cup 2025: இந்தியாவில் அல்ல; ஒருநாள் போட்டியாகவும் அல்ல - ஆசியா கோப்பை அப்டேட்ஸ்!Rohit Sharma மீது விமர்சனம்
கடந்த ஐந்து ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார் ரோஹித் சர்மா. 2023 உலகக் கோப்பை முதல் அணிக்கு நங்கூரமாக செயல்படுவதை விடுத்து, ஆரம்பத்திலேயே பௌளர்களை தாக்கி விளையாடுகிறார் ரோஹித்.
இந்த ஆரோஷமான தொடக்கம் சாம்பியன்ஸ் டிராபியில் அணிக்கு நல்ல ரன்களை எடுத்துத் தரவில்லை. கடந்த சில டெஸ்ட் தொடர்கள் இந்திய அணிக்கு சரியாக செல்லாதபோது, அணியில் ரோஹித் சர்மாவின் இருப்பு குறித்து கேள்வி எழுந்தது. எனினும் பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி சதம் விளாசியதன் மூலம் தன்னை நிரூபித்தார். அதை மீண்டும் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Rohit Sharma'சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை'
இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலும் இது சிறந்த கிரிக்கெட் இல்லை என கம்பீர் கூறியுள்ளார். "சர்வதேச விளையாட்டில், நீங்கள் மேன்மைப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் எல்லா தகுதிகளையும் டிக் செய்துவிட்டதாக சொல்ல முடியாது. எப்போதும் உங்களை மேம்படுத்திக்கொள்ள இடமிருக்கும். அது பேட்டிங்காக இருந்தாலும் சதி ஃபீல்டிங் அல்லது பௌலிங்காக இருந்தாலும் சரி.
நாங்கள் இன்னும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. இன்னும் ஒரு போட்டி இருக்கிறது. அதில் நாங்கள் சரியாக விளையாடுவோம் என நினைக்கிறோம் " என்றும் பேசியுள்ளார்.
Virat Kohli: '335 கேட்ச்கள்' - ரிக்கி பான்டிங், ராகுல் ட்ராவிட்டை கடந்து விராட் கோலி சாதனை!Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
8







English (US) ·