Ronaldo: ``அதே ஆர்வம், அதே கனவு” - அல் நஸர் அணியில் மீண்டும் இணைந்த ரொனால்டோ

6 months ago 7
ARTICLE AD BOX

சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

தனது கால்பந்து பயணத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியை அடித்தளமாகக் கொண்டுதான் தொடங்கினார்.

ரொனால்டோ மான்செஸ்டர் அணியில் இணைந்த பின்னே அவரின் திறமைகள் உலகுக்குத் தெரியவந்தன.

2003-2009-ம் ஆண்டு வரை மான்செஸ்டர் அணியிலிருந்த ரொனால்டோ 2009-ம் ஆண்டுக்குப் பின் ஸ்பெயின் கிளப்பான ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ கிறிஸ்டியானோ ரொனால்டோ

சுமார் 90 மில்லியன் யூரோக்கள் கொடுத்து ரியல் மாட்ரிட் அணி அவரை வாங்கியது.

அதுவரைக்கும் எந்த ஒரு வீரரும் அந்த விலைக்கு வாங்கப்படாததால் உலகின் விலையுயர்ந்த கால்பந்து வீரராக ரொனால்டோ பார்க்கப்பட்டார்.

பின் பல வருடங்கள் கழித்து 2021-ம் ஆண்டு மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியிலேயே இணைந்தார்.

ஆனால் இணைந்த ஓராண்டிலேயே கிளப் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த நவம்பர் மாதம் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிலிருந்து வெளியேறினார் ரொனால்டோ.

அதன் பிறகு இரண்டரை வருட ஒப்பந்த அடிப்படையில் சவுதி அரேபியாவின் அல் நஸர் (AI Nassar) என்ற கிளப் அணியில் இணைந்து விளையாடினார்.

A new chapter begins. Same passion, same dream. Let’s make history together. pic.twitter.com/JRwwjEcSZR

— Cristiano Ronaldo (@Cristiano) June 26, 2025

இந்நிலையில் மீண்டும் அல் நஸர் அணியில் இணைய இருப்பதைத் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், “ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. அதே ஆர்வம், அதே கனவு. ஒன்றாக இணைந்து வரலாற்றை உருவாக்குவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

Cristiano Ronaldo: 132 சர்வதேச வெற்றிகள்; கின்னஸ் சாதனை; 40 வயதிலும் நிற்காமல் சுழலும் கால்கள்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article