RR vs CSK: `அந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்' - 'புஷ்பா' பட ஸ்டைலில் வெற்றியை கொண்டாடிய ஹசரங்கா

8 months ago 10
ARTICLE AD BOX

அஸ்ஸாமின் கவுஹாத்தி மைதானத்தில் நேற்று(மார்ச் 30) நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை அணிகளுக்கிடையேயானப் போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி சென்னையை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.

குறிப்பாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு ஹசரங்கா முக்கியப் பங்காற்றி இருக்கிறார். சிறப்பாக விளையாடியதால் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருக்கிறார்.

csk vs rrcsk vs rr

அணியின் வெற்றிக்குப் பிறகு பேசிய ஹசரங்கா, "நேற்றையப் போட்டியில் அடிப்படையாக நான் செய்யும் சில விஷயங்களை சரியாக செய்துவிட வேண்டுமென்று நினைத்தேன்.

முதல் இன்னிங்ஸில் எங்கள் பேட்ஸ்மேன்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். அதே போல எதிரணியில் ருதுராஜ் நன்றாக பேட்டிங் செய்தார். இன்னிங்ஸின் முடிவில் நான் அவரை அவுட் செய்தேன்.

ஹெட்மயர் களத்தில் துப்பாக்கி சுடும் வீரர் மாதிரி செயல்பட்டார்" என்றவர், விக்கெட் வீழ்த்திய பிறகு புஷ்பா பட பாணியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

ஹசரங்காஹசரங்கா

இதுதொடர்பாக பேசியவர்," இந்தியாவில், தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். புஷ்பா படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலிருந்துதான் அந்த ஸ்டைலை எடுத்தேன்" என்றார்.

Read Entire Article