ARTICLE AD BOX
'லக்னோ திரில் வெற்றி!'
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி வரை திரில்லாக சென்ற இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. 19 வது ஓவர் வரை போட்டி ராஜஸ்தானுக்கு சாதகமாகத்தான் இருந்தது.
Avesh Khanகடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் அந்த ஓவரை சிறப்பாக வீசி 6 ரன்களை மட்டுமே கொடுத்து லக்னோவை வெல்ல வைத்தார். தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார்.
'ரியான் பராக் விரக்தி!'
அவர் பேசியதாவது, 'உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவே கடினமாக இருக்கிறது. 18-19 வது ஓவர் வரை ஆட்டம் எங்கள் கையில்தான் இருந்தது. நான் என்னைதான் குற்றம்சாட்டிக் கொள்வேன். நான் நின்று போட்டியை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும். எங்களின் பௌலர்கள் சிறப்பாகவே வீசினர்.
Riyan Paragபௌலிங்கிலும் கடைசி ஓவர் மட்டும்தான் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. சந்தீப் சர்மாவை நம்பினோம். ஆனால், அவருக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையவில்லை. 165-170 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்திவிடுவோம் என நினைத்தோம்.
Vaibhav Suryavanshi : 'அவனுக்கு பயமில்ல' - அறிமுகப் போட்டியில் எப்படி ஆடினார் இந்த இளம் சூறாவளி?கடைசி ஓவர் நாங்கள் நினைத்தபடி செல்லவில்லை என்பதால் அது நடக்கவில்லை. ஐ.பி.எல் ஒரு சில பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்வி மாறிவிடும் என்பதற்கு இதுவும் உதாரணம்.' என்றார்.

8 months ago
8







English (US) ·