RR vs RCB: "அந்தத் தவறை திருத்திக் கொள்வோம்" - தோல்வி குறித்து சஞ்சு

8 months ago 8
ARTICLE AD BOX

ஐபிஎல் இன்றைய (ஏப்ரல் 13) போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் ஜெய்ப்பூரில் மோதின. இப்போட்டியில், பெங்களூரு அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தானில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 75 ரன்கள் எடுத்திருந்தார்.

அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து 17-வது ஓவரிலேயே இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. பெங்களுருவில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 65 ரன்கள் குவித்தார்.

சஞ்சு சாம்சன் - ரஜத் பட்டிதார்சஞ்சு சாம்சன் - ரஜத் பட்டிதார்

போட்டிக்குப் பின்னர் தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், "நிச்சயமாக இதுபோன்ற விக்கெட்டுகளில் 170 என்பது எளிதாக எட்டக்கூடிய இலக்கே.

விக்கெட் மெதுவாக இருக்கும்போது டாஸை தோற்றபின் பகல் நேர ஆட்டத்தில் முதல் 10 ஓவர் மிகவும் கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்தோம்.

நிச்சயமாக அவர்கள் எங்களுக்கு எதிராக மிகவும் கடினமாக போட்டியை வெளிப்படுத்தியது தெரிந்தது. பவர் பிளெயிலேயே அவர்கள் தங்கள் வெற்றியை உறுதி செய்து விட்டனர்.

கேட்ச்களே போட்டிகளை வென்று தரும். அவர்களும் எங்களுக்கு எதிராக பல கேட்ச்களை விட்டனர். நாங்களும் அவர்களுக்கு எதிராக பல கேட்ச்களை விட்டோம்.

 சஞ்சு சாம்சன் சஞ்சு சாம்சன்

இந்த விஷயத்தை நாங்கள் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பெங்களூர் அணிக்கு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இரண்டாவது இன்னிங்ஸின்போது பேட்டுக்கு பந்து நன்றாக வந்தது. போட்டிக்குப் பிறகு ஆக்கப்பூர்வமான பல விஷயங்களை விவாதித்தோம்.

இந்தப் போட்டியின் தோல்வியை மறந்து விட்டு மீண்டும் பாசிட்டிவாக அடுத்த போட்டிக்கு கம்பேக் கொடுப்போம்." என்று கூறினார்.

IPL 2025: "உண்மையான CSK ரசிகர்கள் யாருன்னு தெரிஞ்சுக்க போறோம்" - பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி
Read Entire Article