ARTICLE AD BOX
ஐபிஎல் இன்றைய (ஏப்ரல் 13) போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு ஆகிய அணிகள் ஜெய்ப்பூரில் மோதின. இப்போட்டியில், பெங்களூரு அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தானில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 75 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து 17-வது ஓவரிலேயே இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. பெங்களுருவில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 65 ரன்கள் குவித்தார்.
சஞ்சு சாம்சன் - ரஜத் பட்டிதார்ஆட்ட நாயகன் விருது வென்ற பின்னர் பேசிய ஃபிலிப் சால்ட், "மிகவும் மகிழ்ச்சி. அணியின் வெற்றிக்காக பங்களிப்பது எப்போதும் மகிழ்ச்சியான விஷயமே.
இந்த மைதானம் சற்று வித்தியாசமாக இருந்தது. இதுபோன்ற சமயங்களில் முத்திரை பதித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
(ஜோப்ரா ஆர்ச்சர் உடனான சண்டை குறித்து கேட்டபோது) நான் அவருக்கு வாய்ப்பளித்தேன். ஆப்சைட் திசையில் அடிக்க முயற்சித்தேன்.
ஆனால், அவர் பந்தை ஸ்விங் செய்து கொண்டிருந்தார். எனவே நான் பந்தை ஒரு திசையில் மட்டுமே அடிக்க எனக்கு வாய்ப்பிருந்தது.
ஃபிலிப் சால்ட்அவருடன் பலமுறை விளையாடியிருக்கிறேன். இதுவும் நல்ல விஷயமே. விக்கெட் மிகவும் மெதுவாக இருந்தது. எனக்கு பவர்பிளேயில் வாய்ப்பு கிடைத்தது.
அதை நான் பயன்படுத்திக் கொண்டேன். ராஜஸ்தான் அணியும் சிறப்பாக செயல்பட்டது. எங்கள் அணியின் பவுலர்கள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதன்பின் பேட்டிங்கிலும் இன்று எங்களுக்கு ஒர்க்அவுட் ஆனது." என்று கூறினார்.
CSK : 'ரெய்னா, பத்ரிநாத் போன்ற வீரர்களை சிஎஸ்கே தவறவிடுகிறது!' - ஹர்ஷா போக்லே கருத்து
8 months ago
8







English (US) ·